பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி. பா. 89

நம்மிடம் அனைத்து வசதிகளும் இருந்தாலும்கூட நாமும் சாதாரண மக்களைப் போல வாழ்ந்து பார்க்க வேண்டும். பிறர் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதை நாம் ஒரு நாளாவது உணர்ந்தாவது பார்க்க வேண்டும் என்று மு.வ. சொல்வார். அதுபோல அவர் ப ா ரி மு ைன யி ல் இருந்து பல்கலைக்கழகத்திற்குப் பேருந்தில் சில சமயம் வருவார். இப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் மேற்கொள்ள ேவ ண் டு .ெ ம ன் று சொன்னால், இயன்ற அளவுக்கு நாம் பிறருக்கு உதவவேண்டும்.

முடிந்த அளவில் பிறருக்கு உதவு; நம்முடைய சக்திக்கு இயன்ற அளவு பிறருக்கு உதவு என்று சொல்வார். அவர் சிந்தனைகளிலே சிறந்ததாக எண்ணத்தக்கது :

“தனிமனித வழிபாடு அளவுக்குமேல் போகக்கூடாது” என்பதாகும்.

“இளைஞர்களை அவர்களுடைய உள்ளம் வெதும்பு கின்ற வகையில் அவர்களை ஏசி அவர்களுடைய ஊக்கத் தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதாகும், அதைத்தான்,

‘பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

- -புறநானுாறு: 182 என்றது புறநானூறு. அதற்கும் மேலே,

எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து’

-திருக்குறள் : 1.25 என்ப து குறள்,