பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர், மு.வ.வின் சிந்தனை வளம்

நம்மிடத்தில் வசதிகள் பல இருக்கலாம், ஒரளவாவது வசதிகளை விட்டுக் கொடுத்து வாழவேண்டும். -ബ്ദു

“நான் சம்பாதித்து வைத்திருப்பது எட்டு தலை முறைக்கும் போதுமானது. அதனால் நான் எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை” என்று சொல்வார்கள். ஆனால், திருவள்ளுவர் சொல்கிறார் : செல்வர்கள்தாம் கவலைப்படவேண்டும்; மற்றவர்களிடத்திலே பணிந்து போகவேண்டும். ஏனென்றால் செல்வர்கள்தாம் ஈட்டிய செல்வத்தைக் காக்க வேண்டியதற்காக அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வார். இதனால் முடிந்த அளவு ஏழைக்கு உதவிசெய் என்று சொல்வார்.

அந்த வகையிமே டாக்டர் மு. வ.வினுடைய கருத்துகள் என்று பார்க்கிற பொழுது,

‘விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பவேண்டும்’

‘அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நடக்க வேண்டும்; உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்கக் கூடாது’ என்பன முன்நிற்கும்

அதனால்தான் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நோக்கும்பொழுது, எளிய வாழ்க்கையாக, பிறருக்கு இரங்கும் வாழ்க்கையாக, உதவும் வாழ்க்கையாக இருந்தது என்பதனை அறிய முடிந்தது.