பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

டாக்டர் மு. வ. அவர்கள் ஒரு தனி மனிதர் அல்லர்; அவர் ஒர் இயக்ஈம். அவர் எழுதிய எழுத்து களைப் படித்துவிட்டு அன்றைக்கு இளைஞர் பலர் அவரைப் பின்பற்றி நடக்கத் தொடங்கினர். அவருடைய நாவல்கள் நிறைய விற்றன. திருமணப் பரிசாக அந்நாளில் மு.வ.வின் நூல்களே அளிக்கப் பெற்றன. வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்களின் ஒட்டு மொத்தமான மதிப்பும் மரியாதையும் மு.வ. பால் படர்ந்தன. மு. வ. அவர்களும் தனி மனிதரை நன்கு நேசித்தார். பெண்களை இரக்க உணர்வோடு பார்த்தார். அதுவும் வாழ்க்கையில் வழி தவறிய பெண்களுக்காக இரக்கம் மிகுதியாகக்காட்டினார். இளைஞர்களுக்காகக் கவலைப்பட்டார். ஏழைகளின் துன்பங்கள் கண்டு வருந்தினார், எனவே சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கிப் புண்களையும் கண்டு அவற்றிற்கேற்ப மருந்துகளையும் கண்டார். சுருங்கச் செர்ன்னால் சமுதாய மருத்துவராகத் துவங்கினார். அவர் எழுத்து அக்காலச் சமுதாயத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியது. எடுத்துக் காட்டாக “மண்ணின் மதிப்பு என்னும் தம் நூலில் தம் கருத்துகளைப் பின்வருமாறு, பெய்துள்ளார் :

இந்த நாட்டு மண்ணுக்கு மதிப்பு உயர வேண்டுமானால், இங்கே உள்ள அற நூல்களின் பெருமையைச் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. இந்தநாட்டு மக்களின் வாழ்க்கையையே சான்றாக எடுத்துச்சொல்ல வேண்டும்.அந்த அளவுக்கு