பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

வாழ்க்கை உயரவேண்டும். அறிவுரைகள் உபதேசங் கள்-மட்டுமே போதும் என்று எண்ணிவிடக் கூடாது. அவைகள் ஓர் அளவுக்கு வேண்டும். அவற்றிற்கு அப்பால் குற்றங்களுக்குக் காரணமாக குறைகள் இல்லாத வகையில் வாழ்க்கை நிலையை உயர்த்தி அமைக்க வேண்டும். களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்ய வேண்டும். ஒரு புறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும், மற்றொரு புறம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்க வேண்டும், ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடுதான் எ ன் ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்...இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும்.இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி (ப:10-11)

“வாள் முனையைவிடப் பேனா முனை சீரியது; சிறந்த பயனைத் தருவது” என்று மாவீரன் நெப்போலியன் குறிப்பிட்டதாகக் கூறுவார்கள். துய உயரந்த எண்ணங் களைச் சமுதாயமான நிலத்தில் விதைத்து விட வேண்டும். அது ஒரு காலத்தில் உரிய-உயரிய பயனை விளைவிக்கும் என உறுதியாக நம்பினார் மு.வ. அதனால் அவர் பட்டம் பதவிகளை விட எழுத்தாளர் என்ற பதவியே தமக்கு மிகவும் பிடித்தாகக் கருதினார். தாம் கடைசி வரையில் ஒய்வு பெற விரும்பாத பதவி, எழுத்தாளர் பதவிதான் என்றும், எழுத்து அவர் உயிருடன் கவர்ந்து விட்ட ஒன்று என்றும், தம் கடைசி மூச்க உள்ள வரையில் ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கப் போவதாகவும், எழுத முடியாத போது சொல்லிக் கொண்டே இருக்கப்