பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா . 93

போவதாகவும் தரம் மறைவதற்கு ஒரு திங்கள் முன்னர் மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற ஒரு கருத் தரங்கில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் நன்றாக வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்க வேண்டும் என்றும், ஒன்று உள்ளம், மற்றொன்று உடம்பு, மூன்றாவது சுற்றுப்புறம் என்றும், தனி மனிதன் விரும்பினால் உன்னத்தை நன்றாக வைத்திருக்க முடியும் என்றும் எல்லோரும் சேர்ந்து விரும்பினால்தான் சுற்றுப் புறத்தை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார். அறிஞர் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத பணி தனி மனிதரைத் திருத்துவது அல்ல என்றும், சமுதாயத்தைத் திருத்துவதே யாகும் என்றும், ஆசையோடு போராடுவதை விட்டு அமைப்போடு போராட வேண்டும் என்றும், பொருட்பற்றைப் போக்கு வதை விட்டுப் பணவேட்டையைப் போக்க முயலவேண்டும் - என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்ல சமுதாயம் ஏற்படவேண்டுமானால் பழங்காலம் போல் மனச்சான்றுக்கு மதிப்பளிக்கும் சிறிய ஊர்களும் சிறிய அமைப்புகளும் ஏற்படவேண்டும் என்றும், அதுவே காந்திய வழி என்றும், பழங்காலத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் ஊட்டியதாகிய சமயத்திற்கு ஒப்பாகிய ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவித்து, அதனைக் கடவுளுடைய ஆணை என ஏற்று எல்லோரும் எல்லோருடைய நன்மைக் காகவும் பின்பற்றி ஒழுக வேண்டும் என்றும் குறிப்பிட்டு

உள்ளார்.

“மண் குடிசை என்ற நாவலில் சமுதாயம் பற் றிய தம் முடிந்த சுருத்தை-சிந்தனை வளத்தினைப் பின் வருமாறு புலப்படுத்தியுள்ளார்.