பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

“உலகத்தைத் திருத்த நம் பங்கு முயற்சி செய்வோம். பனவேட்டையும் புகழ் வேட்டையும் அவற்றால் ஆகிய பலவகை ஏக்கங்களும் கவலைகளும் இல்லாமல் சமு தாயம் சீராகஅமைவதற்கு உரிய வகையில் அறிவை வளர்ப்போம்: அறநெறியைப் பரப்புவோம். உடனே பயன் காண முடியாமல் போகலாம். கவலை வேண்டா: எதிர்கால நன்மையைக் கருதிக் கடமையைச் செய்வோம். ஆங்காங்கு நல்ல விதைகளைத் தூவிச் செல்வோம். அதுவும் இயலாத நிலையானால், இயன்றவரை நிலத்தைப் பண்படுத்தி விட்டுச் செல்வோம். அது நம் கடமை: நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை” (ப : 504)

அறத்தில் அசையாத நம்பிக்கை கொண்டவர் டாக்டர் மு.வ. அவர்களாவர்; கடவுளின் ஆட்சி என்பதே அறத்தின் ஆட்சி என்பார். “அன்பே கடவுள் என்று சொல்லப்படுவதை விடக் கடவுள் அன்பு வடிவானவர் என்று சொல்லப்பட வேண்டும் என்று விரும்பினார் காந்தியடிகள்’ என்பார். பலருடைய ஆட்டோ கிராப், ஏட்டில் ‘அறம் வாழ்க! அறம் வெல்க’ என்றே எழுதிக் கையெழுத்திடுவது டாக்டர் மு.வ.வின் வழக்கம். இவ்வாறு அறம் பற்றிய தம் ஆழமான கருத்தினைப் பின்வருமாறு புலப்படுத்தியுள்ளார் :

“தனி மனிதர் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும்; மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கோ அறம் கட்டாயம்வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் கிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஒட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ,