பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 95

அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்”

(அறமும் அரசியலும்; முன்னுரை. ப. 3)

அறத்தின்பால்-அறநெறியின்பால் அ ைச ய |ா த நம்பிக்கை கொண்டிருந்த டாக்டர் மு.வ. அவர்கள் தாய் மொழிக் கல்வி என்பதிலும் உறுதியாக இருந்தார். பள்ளி களிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமொழி தவிர அனைத்துப் பாடங்களும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் அதிகக் கவனமாக இருந்தார். அக் கொள்கைக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்; போராடினார். ‘பொய்க்கால்’ என்ற விரிவான கட்டுரையினை இப் பொருள் குறித்து எழுதினார். உயிரான இக்கொள்கை குறித்த அவர்தம் தெளிந்த கருத்து வருமாறு :

“நூல்கள் எந்த மொழியில் இருப்பினும் இருக்க, கற்பித்தலும் கற்றலும் தாய்மொழியில் இருத்தல் கடமை என்ற தெளிவுதான் இன்று தமிழ்நாட்டு அறிஞர்க்கு வேண்டும். ஒரு தலைமுறைவரையில் இந்த நிலைக்கு இடம் கொடுப்போமானால், அடுத்த தலை முறையிலேயே அறிவியல் நூல்கள் பல தாய்மொழி யிலேயே இயற்றப்பட்டுவிடும். இந்தத் தலைமுறை யில் தாய்மொழியில் சிந்தனை வளர இடம் கொடுப் போம். அடுத்த தலைமுறையில் நூல்கள் எழ வழி வகுத்தவர்களாவோம், இந்த நாட்டில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை; தொன்றுதொட்டு மூளைவளம் உள்ள நாடு இது. ஆதலின் நம்பிக்கை கொள்வோம்: துணிவோம்”. (மொழிப்பற்று: ப:102)

(