பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

குழந்தைகளிடத்தில் நீங்காப்பற்றும், அவர்கள் வளர்ச் சியில் அதிக அக்கறையும் கொண்ட மு.வ. அவர்கள் குழந்தை’ என்றொரு நூல் எழுதியிருப்பதனை முன்னரே கண்டோம். குழந்தைகளை நல்ல முறையில் ஒம்பி வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்க்கே உண்டு என்பதனை மு.வ. அவர்கள் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கதாகும்.

‘குழந்தை இளஞ்செடி போன்றது. மற்றவர்கள் வளர்ந்த மரம் போன்றவர்கள். இளஞ்செடியை வளர்க்கும் மண் நீர் காற்று ஒளி ஆகியவை உயிரற்றவை. என்றும் ஒரு நிலையாக இருப்பவை. ஆனால் குழந்தையை வளர்க்கும் பெற்றோரும் மற்றோரும் உயிருள்ளவர்கள்; உணர்ச்சியுடையவர் கள்; மாறும் இயல்புடையவர்கள். ஆகையால் இளஞ் செடி போலக் குழந்தை இயல்பாக வளரமுடிவதில்லை. வளர்ப்பவர்களின் உணர்ச்சிகளும் விருப்பு வெறுப்புக் களும் அறிவும் அறியாமையும் குழந்தையின் வாழ் வைப் பலவாறு மாற்றியமைக்கக் காண்கிறோம்” (குழந்தை; ப:3)

டாக்டர் மு. வ. அவர்களோடு நெருங்கிப் பழகியவர் களுக்குக்கூட:அவர் எச்சமய நம்பிக்கைகளை மேற்கொள் இறார் என்பதனை அறிந்து கொள்ள இயலாது. அவர் ஆத்திகரா, நாத்திகரா என்று அறிய முடியாமல் சிலர் தடுமாறுவர். டாக்டர் மு.வ. அறத்தில் அசையாத நம்பிக்கை உடையவர். அதுபோன்றே அறத்தின் தலைவர் என்று கருதிய கடவுளிடத்திலும் அசையாத பக்தி யுடையவர். பக்தியை ஆரவாரம் செய்து புலப்படுத்திக் கொள்ளாதவர். அமைதியான தியானத்தில் பற்றுமிக்கவர்; திருநாவுக்கரசர் பாடல்களில் உள்ளம் தோய்ந்தவர்.