பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 97

நம்மாழ்வார் பாடல்களை விரும்பிப்படிப்பார். ஆண்டாள் பாடல்களைப் பாடி மெய்யுருகி நிற்பார். மாணிக்கவாசகரின் மிகப் பல பாடல்கள் அவருக்கு மனப்பாடம். தாயுமான தயாபரர் பாடல்களை வாய்விட்டுப் பாடுவார். வள்ளலார் அருட்பாவிலும் ஈடுபாடு உண்டு. இராமகிட்ைடினர், விவேகானந்தர், இராமதீர்த்தர் ஆன்மீக உரைகளில் நெஞ்சம் நெகிழ்ந்து நிற்பார். தட்சிணாமூர்த்தி மூர்த்தத் தில் நெஞ்சம் பறிகொடுப்பார். தாயுமானவரின் பராபரக் கண்ணி, கிளிக் கண்ணி முதலியன அவருடைய பூசனைக் குரிய பாடல்கள். சமயத்துறை பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம் நல்வாழ்வு” என்றும் நூலில் எதிரொலிக்கக் காணலாம்.

“கடவுள் எல்லா உயிர்களின் வாழ்வுக்கும் பொது வான திட்டங்கள் வகுத்து, பொதுமையான ஆட்சி புரியும் ஒரு பெருஞ்சக்தி என்று உணர வேண்டும்”

(ப : 1.0)

டாக்டர் (Lд. Glu. அவர்கள் ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக்காலம் தமிழ் நாட்டில் எழுத்துலகை ஆண்ட பெருந்தகையாக விளங்கினார். அவர் தொடாத துறை ஒன்றுமில்லை; தொட்ட துறைகளை அழகுபடுத் தாமல் விட்டதில்லை” என்றபடி, அவர் எழுதுகோல்

எல்லாத் துறைகளையும் பற்றி எழுதியது. இலக்கியம் 24; சிறுவர் இலக்சியம் 5; கடித இலக்கியம் 4; பயண இலக் கியம் 1; இலக்கிய வரலாறு 1; மொழியியல் 6 வாழ்க்கை வரலாறு 4: நாவல் 12; சிறுகதை 27; சிந்தனைக்கதை 2; நாடகம் 6: கட்டுரை 11; இலக்கணம் 3; மொழி பெயர்ப்பு நூல் 2: ஆங்கில நூல் 2 ஆக 85 நூல்களாக அவர் எழுதிய அனைத்துவகை நூல்களிலும் அவர் சிந்தனை வளம் சிறந்திருக்கக் காணலாம்.