பக்கம்:மூட்டம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسمت مع / 99 சும்மா இருந்த கூட்டம், பழனிவேலு கையாட்டியதும், ஒற்றை மனிதனாய்க் கத்தியது. 'செயராம்...செயசெயராம்... சாமியார் முகம் சுளித்தார். அவர்களின் முழக்கத்திற்கு திருத்தம் கொண்டு வந்தார். அப்படிச் சொல்லப்படாது. நான் சொல்ற மாதிரியே ஜெய்ராம் என்று சொல்லணும். செயசெயராம்னு சொல்லக் கூடாது. ஏனென்றால் நமது கொள்கை ஒரு நாடு. ஒரு மதம். ஒரே கலாச்சாரம் என்பது. ஆகையால் இனிமேல் எந்த பக்தனும் ஜெய்ராமுக்குப் பதிலாக செயசெயராம் என்றால், அது பாவமாகக் கருதப்படும். ராமா அல்ல, ராம். செய அல்ல, ஜெய். சொல்லுங்க பார்க்கலாம். ஜெய்ராம்...' "செய்ராம் செய்ராம்: 'என்னத்தை செய்யப் போlங்க ? நீங்க சொல்றதைப் பாத்தா நாம், ராமனுக்காக எதுவும் செய்யாமல் அவரே தனக்குத்தானே ஏதாவது செய்யனும் என்று நினைப்பது போல் இருக்கிறது. சொல்லுங்கள். 'ஜெய்ராம், ஜெய்ராம்" ஒங்களுக்கு 'ஜெ. பிடிக்காதா... பிடிக்கணும்... வேற வழியில்லை...! கூட்டத்தின் முக்கால்வாசிப் பேருக்கு "ஜெ" வரவில்லை. ஆனால் அபிராமிக்கு வந்தது. கம்பீரமும் இனிமையும் குரலில் கலக்க 'ஜெய்ராம் என்றாள். ஆனால் அவளுக்கு ஒரு வருத்தம். சுவாமிஜி, அவளை இந்தப் பூலோகத்தில் பிறப்பித்த அன்னை அபிராமியைப் பற்றியும் முழங்கியிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு சமாதானம் பூரீராமன் யார்? அன்னை அபிராமியின் சகோதரன்தானே? தாய்மாமன் பேரைச் சொன்னால் தப்பில்லையே... சுவாமிஜி, ஒரு கையைத் தூக்கி விரல்களை முஷ்டியாக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/101&oldid=882271" இலிருந்து மீள்விக்கப்பட்டது