பக்கம்:மூட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسمتبوع / 100 அதுவே ஒரு குட்டிக் குண்டாந்தடிபோல் தோன்றப் பேசினார். 'இந்துக்களே! இந்துக்களே! நீங்கள் எல்லாம் இந்துக் களா...இந்துக்களே...! இந்து என்பவன் யார்? எவனொருவன், இந்து ஆலயம் இருக்குமிடத்தில் இருக்கும் மசூதியைத் தகர்ப்பானோ, எவனொருவன் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கடைப்பிடிப்பானோ, எவனொருவன் இந்த நாட்டிலே இருக்கும் பாகிஸ்தானியர்களை தட்டிக் கேட்பானோ, எவனொருவன்காவிக் கொடியைக் கரம் ஏந்திப்பிடிப்பானோ அவனே இந்து அவன்தான் இந்து.' சுவாமிஜி பேசிக் கொண்டே போனார். முஸ்லிம் படையெடுப்பு, ஒளரங்கசீப்பின் அட்டுழியம். மூன்று பொண்டாட்டி, இஸ்லாமியச் சட்டம், தலாக் போன்ற பலவேறு விஷ யங்களை விளக்கிக் கொண்டு போனார். கூட்டம் தூங்கப் போனது. அதற்குள் வெளியே ஒரு உரத்த குரல். மணியடிப்பது மாதிரியான மைக் வழியான குரல். பாதிப்பேர் விழுந்தடித்து வெளியே ஓடிவந்து நின்றபோது... அந்த ஆட்டோவே தனது உச்சித் தலைமூலம், உரத்துக் கத்துவது போல் தோன்றியது. பெரியோர்களே! தாய்மர்ர்களே! ஒளியின் வேகம் அதாவது, ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் வேகம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல். நமது சூரியனிலிருந்து அந்த ஒளி பூமிக்கு வருவதற்கு நான்கு நிமிடம் ஆகிறது. இப்படிப் பல நட்சத்திரங்களிலிருந்து ஒளி வருவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகின்றன என்றால், இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பூமி, பிரபஞ்சக் கடலில் ஒரு துளிதான். கோடி கோடியே கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. இயற்கையில் ஒவ்வொன்றுமே ஒரு அற்புதம். காலையில் பூக்கும் மலர்கள், மாலையில் பூக்காது; மாலையில் பூக்கும் மலர்கள் காலையில் கண் திறக்காது. வண்டுகளும் அப்படியே...பரிணாம போட்டியின் பக்குவமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/102&oldid=882273" இலிருந்து மீள்விக்கப்பட்டது