பக்கம்:மூட்டம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1011மூட்டம் சுெ.சமுத்திரம் இந்தப் பூக்கள்...இந்த வண்டுகள்; இப்படிப்பட்ட இந்த அற்புதக் கிரகத்தில் விஞ்ஞான யுகம் வேகவேகமாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று சொல்வது பாசிசம். அதாவது கொடுங்கோன்மை. இப்படிச் சொல்கிறவர்கள் ஆதிதிரா விடர்களைத் தள்ளி வைத்தது ஏன்? இப்பவாவது ஆதி திராவிடர் வீட்டில் பெண் கொடுக்கல், வாங்கல் செய்வார்களா? இல்லை வயல் வெட்டிக்குப் போகும் உங்களுடைய கூலியைக் கூட்டித் தருவார்களா? ஆகையால் பெரியோர்களே ஒரே கலாச்சாரம் என்பது, கண்ணால்கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத கழுதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது மாதிரி, அடாவடித்தனமானதும் கூட, ஆனால் இந்தியர்களாகிய நாம் கழுதைகள் இல்லை. பல்வேறு நிறத்திலான குதிரைகள். சண்டைக் குதிரைகள் அல்ல. இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சவாரிக் குதிரைகள். பிறத்தியார் நிலத்தில் கட்டிய வீட்டைக் கூட இடிக்க முடியாத இந்தக் காலத்தில் பழமையான ஒரு மசூதியை, இடிப்பது. வெளியே நின்ற கூட்டம் அப்படியே நின்றது. சிலர் கை தட்டக்கூடப் போனார்கள். அதற்குள் பழனிவேல், சங்கரசுப்பு வகையறாக்களோடு வந்து ஆட்டோவை முறைத்தார். கூட்டம் நிதானித்ததைப் பார்த்த முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், ஆட்டோவிலிருந்து இறங்கி வெளியே வந்தார்கள். முத்துக்குமார் கை மைக்கில் பேசப்பேச, காதர்பாட்சா தலையை ஆட்டினான். பழனிவேலால் தாங்க முடியவில்லை. 'நாம் பள்ளுப்பறைகளைக் கட்டணும்னு சொல்றான். நம்ம பொண்ணுகளை பள்ளுப்பறைகளுக்குக் கொடுக்க ணும்னு சொல்றான். இன்னுமாடா பாத்துக்கிட்டு நிக்கிறிக? இதுக்காடா கூட்டி வந்தேன்?...நம்மை வம்புக்கு அழைக் கிறது மாதிரி, ஆட்டோவை அனுப்பி இந்துமத விரோதப் பிரச்சாரம் செய்யுற மசூதிபாளையம் மண்டியிடணும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/103&oldid=882274" இலிருந்து மீள்விக்கப்பட்டது