பக்கம்:மூட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102/ عyقاسات சுெ.சமுத்திரம் அந்தக் கூட்டம், உடம்பை நெளித்தபோது குண்டாந்தடி சீருடைக்காரர்கள், அந்த ஆட்டோவைப் பார்த்து ஓடினார்கள். அப்படியும், காதரும் முத்துக்குமாரும் தங்கள் பாட்டுக்கு இயங்கியபோது, டிரைவரால் பொறுக்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் ஆட்டோவுக்குள் தூக்கிப்போட்டு வண்டியை எடுத்தார். ஆட்டோ அந்த டவுனின் பிரதான சாலை வழியாக ஒடி, பின்னர் அதிலிருந்து கிளைவிட்ட குப்பிச்சாலையில் தாவி மசூதி பாளையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. பின்னால் குண்டாந்தடித் தொண்டர்களும், கூட்டமும் கற்களை எடுத்து எடுத்து ஆட்டோவின் மேல் எறிந்து எறிந்து ஒடியது. ஆட்டோவின் ஒலிபெருக்கிக்கு சில விழுப்புண்கள். பல கற்கள் ஆட்டோவின் பின் திரையைக் கிழித்து உள்ளே பாய்ந்தன. உள்ளே என்ன செய்தனவோ ஏது செய்தனவோ? ஆனாலும் ஆட்டோ அவர்களுக்கு 'கடுக்காய்" கொடுத்தபடியே ஒடியது. அந்தக் கூட்டம் ஆயுத பாணியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றது. மசூதிபாளையம் கண்ணுக்குத் தெரிந்த இடம். பழனிவேல் இப்போது சுவாமிஜியோடும், சங்கரசுப்புவோடும், ராமலிங்கத்தோடும் அங்கே வந்தார். மசூதிபாளையத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு போகும் குழாய்களைப் பார்த்தார். மேலே பறந்த மின்சாரக் கம்பங்களையும், டெலிபோன் கம்பிகளையும் நோட்டம் விட்டார். ஆவேசமாகக் கத்தினார். 'இங்கே நில்லுங்க, இப்படியே நில்லுங்க' எந்த சாய்புவையும் உள்ளேயும் விடப்படாது. வெளியேயும் விடப்படாது. அவங்க இந்த வழியா வந்துதான் ஆகணும். அந்தப் பக்கம் ஏரி. இந்தப் பக்கம் குளம். பின்பக்கம் மலை. பொந்துக்குள்ள இருக்கிற பெருச்சாளி மூட்டம் போட்டால் வெளியில வராமலா இருக்கும்? என்னடா பார்த்துக்கிட்டு இருக்கீங்க? அந்தத் தண்ணிக் குழாயை உடையுங்க. சாய்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/104&oldid=882276" இலிருந்து மீள்விக்கப்பட்டது