பக்கம்:மூட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستعyع / 103 பயலுவ எப்படி தண்ணி குடிக்கானுவன்னு பார்க்கிறேன். சங்கரசுப்பு நீங்க தொண்டர்களை கூட்டிக்கிட்டு ஏரிப் பக்கம் போங்க. மதகை அடையுங்க!... டெலிபோன் ஒயரை வெட்டுங்க... டேய்... டேய்... அது மின்சாரக் கம்பிடா... தொடாதே... அதுக்கு... அப்புறமா ஒரு வழி செய்யலாம்' குண்டாந்தடித் தொண்டர்கள் சொல்லப் பொறுக்க வில்லை. நான்கைந்து பேர்களிடமிருந்து - அவர்கள் காரணம் புரியாமலே வைத்திருந்த கடப்பாரைக் கம்பிகளைப் பறித்தார்கள். ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றை வழி மறித்துக் கட்டிய ஏரியிலிருந்து தண்ணீர் சுமந்து பாதி மண்ணில் புதைபட்டும், மீதி வெளியே தெரிந்தும் நெருப்புக் கோழியாய் வெளிப்பட்ட நான்கு சிமெண்ட் குழாய்கள் பக்கம் போய்க் கம்பீரமாய் நின்றார்கள். பிறகு தங்களது 'கர சேவைக்கு பூரீராமனைத் துணைக்கழைக்க கண்களை மூடித் தியானித்தார்கள். அந்தக் கண்கள் மீண்டும் திறந்ததும். நெடுஞ்சாண்கிடையாய்க் கிடந்த குழாய்கள் மேல் இரும்புக் கம்பிகள் மோதின. அந்தக் குழாய்களில் ஒரு பகுதி வார்ப்பு இரும்பால் வடிக்கப்பட்டதால் , குத்தப் போன கம்பிகள் திருப்பித் தாக்கப்பட்ட்துபோல் அந்தக் குழாய்களிலிருந்து நழுவின. ஆனாலும் அந்தக் குழாய்களில் வெள்ளை வெள்ளையான காயங்கள் ஏற்பட்டன. பழனிவேல் கூட்டத்தை ஏவிவிட்டார். அத்தனை பேரும் குழாய்ப் பக்கம் ஓடினார்கள். அவற்றை உடைப்பதில் உள்ள உழைப்பின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட படித்த சிலர் இரண்டு மூன்று காவிக் கொடிகளை சாலைப் பக்கம் நட்டுக் கொண்டு இருந்தார்கள். அரை மணி நேரத்திற்குள், அந்தக் குழாய்கள் குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடித்தன. அவற்றிலிருந்து ஒடிய தண்ணீர் முதலில் கண்ணிராயும், பிறகு செந்நீராயும் வெளிப்பட்டது. ஆங்காங்கே சின்னப் பிள்ளைகள் வீடுகட்டி விளையாடுற மாதிரியான சின்னச் சின்னக் குளங்கள் குழாய்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/105&oldid=882278" இலிருந்து மீள்விக்கப்பட்டது