பக்கம்:மூட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستيع / 105 கண்ணிரும் கம்பலையுமாய் காரைச் சூழ்ந்தவர்களிடம் மன்றாடினாள். - "ஆம்பளைங்க வந்தா வம்புன்னு எம்புருஷனையும், மருமகனையும் அங்கேயே விட்டுட்டு நான் மட்டும் இவளைக் கூட்டிக்கிட்டு வாரேன். தயவு செய்து கருணை காட்டுங்க. அண்ணே நீங்கதான் பழனிவேலு-ஒங்களை திவான் முகம்மது வீட்டிலே பலதடவை பார்த்திருக்கிறேன்... எங்களை... அவரு எப்பவுமே சேர்த்துக்க மாட்டாரு... நீங்களும் சேர்க்காட்டி எப்படி? நான் கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த பொண்ணுண்ண்ே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாட்டி வாயும்வயிறுமாய் செத்துப்போவாண்னே' கருணை காட்டுங்கண்ணே! அல்லா உங்களுக்கு அருளுவார்ண்ணே. வழிவிடுங்கண்ணே...' பழனிவேலு வேறுபக்கமாக நடந்தபோது, ஒரு குண்டாந்தடி அதட்டியது. 'அல்லா உங்களுக்கு மட்டும் அருளினால் போதும். எங்களுக்கு ராமர் இருக்கார் ஒங்களுக்கு வழிவிட எங்களுக்குப் பைத்தியமா? முதல்ல ஆஸ்பத்திரிக்கு போவிங்க. அப்புறம் கலெட்டர்கிட்டே போவிங்க. போலீஸ் இங்கவரும், படுகளத்திலே ஒப்பாரி கூடாதும்மா... திரும்பிப் போ! திரும்பிப் பார்க்காமே போ!' இன்னொரு சீருடை குறுக்குக் கேள்வி போட்டது. 'இப்பக்கூட இந்தப் பொண்ணு வயித்துக்குள்ளே பஞ்சை அடைச்சிக்கிட்டு நடிக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?" அம்மாக்காரி, மீண்டும் மீண்டும் கெஞ்சினாள். அதற்குள், உள்ளே கிடந்த பெண், சன்னம் சன்னமாய் குரல் இழந்து கொண்டிருந்தாள். இன்னொரு குண்டாந்தடி அதட்டியது. ‘ஏண்டா நீ டிரைவரா இல்ல... எருமமாடா காரை எடுத்துக்கிட்டு போறியா... இல்லை... அதை காயலாங்கடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/107&oldid=882281" இலிருந்து மீள்விக்கப்பட்டது