பக்கம்:மூட்டம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شتشيع / 106 ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா... இப்போது, தாய்க்காரியின் முகம் வெளுத்தது. கண்கள், சிறிது நேரம் மூடின. அவள் திறந்தபோது, எதிரே தோன்றிய அரிவாள்களையும், உள்ளுறுப்புகளைத் தோண்டி எடுக்கக் கூடிய சூரிக்கத்திகளையும், தொட்டாலே ரத்தம் குடிக்கும் வேல் கம்புகளையும், இழுத்துப் பிடித்துக் கவ்வும் சைக்கிள் செயின்களையும் கண்டன. இதற்குள் இரண்டு மூன்று பேர் அந்தக் காரை அங்கும் இங்கும் முஷ்டிகளால் குத்தினார்கள். ஆனாலும் அங்கே நின்ற சாதா கூட்டத்திடம் பச்சாதாபம் மேலோங்கியது. ஆனாலும் பழனிவேல் பார்த்த பார்வையில் கட்டுப்பட்டது. வெளியே கோபப்படுவதுபோல் பாவலா செய்து கொண்டும், உள்ளுக்குள் அழுது கொண்டும் நின்றது. பிணம் போல் கிடந்த மகளைப் பார்த்தபடியே தாய்க்காரி காருக்குள் ஏறினாள். கார் பின்பக்கமாய் நகர்ந்து, அப்புறம் தென்பக்கமாய்த் திரும்ப ஓடியது. கூட்டத்திற்கு, பின் கண்ணாடி டி.வி.காட்சி போலத் தெரிந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் கைகளை மீண்டும் மீண்டும் மேலே தூக்குகிறார். தாய்க்காரி அவற்றை இழுத்துப் பிடிக்கிறார் கூட்டம், பழனிவேலுவை குற்றம்சாட்டும் தோரணையில் பார்த்தபோது, அவர் ஆணையிட்டார். எவ்வளவு நாளானா லும் சரி. இங்கேயே நிற்கணும். இப்படியே நிற்கணும்... ஆறுமணி நேரத்திற்குப் பிறகு சைடில நிற்க றவுங்க இங்க வரணும். நீங்க அங்க போகணும். மசூதி பாளையத்திலிருந்து இந்தப் பக்கம் ஒரு காக்கா குருவிகூடப் பறக்கக் கூடாது. நீங்க என்னனெல்லாம் சாப்பிடுவீங்களோ அதெல்லாம் உங்களைத் தேடி இங்க வரும், உறையும் பாக்கெட்டும் தானா வரும். இந்தச் சமயத்தில் மசூதி பாளையத்தில் முனையில் கூட்டம் அதிகமானது போல் தோன்றியது. ஆகாயத்தை நோக்கிக் கைகளை வளைத்தது கண்ணில்பட்டது. இங்கிருந்து பலர் அவர்களை நோக்கி ஓடப்போனார்கள். சிலர் அவர்களைத் தங்கள் பக்கம் வரும்படி சவால் விட்டார்கள். 'செய்ராம் செய்ராம் என்ற முழக்கங்கள்! அப்போது பார்த்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/108&oldid=882282" இலிருந்து மீள்விக்கப்பட்டது