பக்கம்:மூட்டம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فستشعرع / 108 களியைச் சாப்பிட்டும் நடமாடிக் கொண்டிருந்தவன் தான். ஆனால் இப்போது வேறுவழியில்லை. அந்த வீட்டிற்குள் அவ்வப்போது ஆட்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் முற்றுகையில் இவனைப் பற்றி என்ன சொன்னாலும் எடுபடாது என்பதால், அந்த வீட்டினரின் விருப்பத்திற்கு விரோதமாகவே அங்கே பன்றியிலும் கேவலமாய், உள்ளே வருகிறவர்களை வேட்டை நாய்களாய் அனுமானித்துக் கொண்டு ஒரு விநோதப் பிராணியாகக் கிடக்க வேண்டியதாயிற்று. அன்று சாராயப் பயல்களுக்கும்... ஜகாத் படைக்கும் இடையே மாட்டிக் கொண்ட அவன் எப்படித் தப்பினோம் என்பதை இன்னும் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச்சாலையில் ஓடியவன் பக்கத்தில் உள்ள கருவேல மரக்காட்டில் குதித்து, கையிலும் காலிலும் முட்கள் முரட்டுத்தனமாக உட்போக எப்படியோ அமீரின் வீட்டுப் பின் பக்கம் வந்து விட்டான். அவன் அப்படி வருவான்.அல்லது வரவேண்டும் என்று எதிர்பார்த்தது போல் பாத்திமா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். அவன் அந்த வாசலுக்கு மத்தியில் நின்று கொண்டு குமுறிக் குமுறி அழுதபோது, அவள்முன்வாசல் பக்கம் ஒடிக் கதவைச்சாத்தப் போனாள். அப்போது, அந்த வீடும்-குறிப்பாக அவளும் அந்தச் சூழலில் தன்னை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அனுமானித்து, அவன் அந்த வீட்டின் கொல்லைப்புற வேலியைத் தாண்டப் போன போது, பாத்திமா ஓடிவந்து அவன் கைகளைப் பலவந்தமாகப் பிடித்து, பிடரியில் கைபோட்டு வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். அந்த இருவருக்கும் அப்போதோ அல்லது இப்போதோ இப்படி ஒருவரை ஒருவர் தொட்டது பற்றிய ஒரு பிரக்ஞை கூட ஏற்படவில்லை. காலடிச்சத்தமும், வளையல் சத்தமும் கொண்ட கலவைச் சத்தம் கேட்டு மாரியப்பன் கண் திறந்தான். ஜரிகைக் காகிதத்தில் வெள்ளைக் கோடுகள் போட்டது போன்ற சேலை கட்டியிருந்த பாத்திமா தலைமுடி அந்தத் தலையை யாரோ ஆணி வைத்து அடித்தது போல், அங்குமிங்குமாய்ச்சிதறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/110&oldid=882287" இலிருந்து மீள்விக்கப்பட்டது