பக்கம்:மூட்டம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் تستع/109 கிடக்க, எதிரே நின்றாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும், அவளைப் பார்க்கப் அவனுக்கும் என்னவோ போலிருந்தது. வெளியே துருத்தும் மாரியப்பனின் கண்கள் இப்போது குகைகள் போலாகிவிட்டன. வாயோடு போட்டியிடும் பாத்திமாவின் கண்கள் தங்களது எச்சிலை உமிழ்ந்தன. ஒருத்தனுக்கு மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டுமே என்ற தாகம்; ஒருத்திக்கு அவனை, அதிலிருந்து காக்க வேண்டுமே என்ற வேகம். இந்தத் தாகத்தோடும், வேகத்தோடும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபோது, பாத்திமா அவனுக்கு விபரம் சொன்னாள். ஆகாயத்தை நிலவு போல் காட்டிய கூரைமேட்டைப் பார்த்தபடியே, மகாபாரதப் போரை திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொன்னானாமே அப்படிச் சொன்னாள். 'முந்தா நாளும், நேற்றும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணி வந்தது... இன்னிக்கு துப்புரவா ஒரு சொட்டுத் தண்ணி கூட வரலை. முன்னாலே வந்த வெள்ளத்திலே அங்கங்க கிணறுகளும் மணல் மேடாயிற்று. இப்போ தான் துரு எடுக்கப் போனாங்க. அது முடியுமுன்னாலே இப்படிப்பட்ட நிலைமை. ஊர்ஜனமே தெருவுக்கு வந்திடுச்சி. பம்புகளை அடிச்சி அடிச்சி அதோட பிடிங்க தான் கழண்டுச்சி. டவுனிலிருந்து வரவேண்டிய காய்கறியும்வரலை. அரிசி மண்டி ஆறுமுகமும் அதை இழுத்து மூடிட்டு ஓடிட்டார். யாருக்கு என்ன பண்றதுன்னே ஒண்ணும் புரியலே. ஒவ்வொருத்தர் முகமும் பைத்தியம் பிடிச்சது மாதிரியே கண்ணச் சுருக்குது. வாயக் கோணுது. சோறு இல்லாமல் இருக்கலாம், துணி கூட இல்லாம இருக்கலாம். ஆனாதண்ணி இல்லாம எப்படி இருக்கது?" அவனிடம் ஆறுதல் கேட்பது போலவும், அவனை ஆற்றுப்படுத்துவது போலவும் பாத்திமா பார்த்தாள். அவன் எதையும் உள்வாங்கும் நிலையில் இல்லாதது போல், ஒரு கையை அம்பாக்கி அதில் தலையைப் போடுவதற்காகக் கீழே குனிந்தான். பிறகு மீண்டும் எழுந்து வெளியே நடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/111&oldid=882289" இலிருந்து மீள்விக்கப்பட்டது