பக்கம்:மூட்டம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فسثسرع / 110 அவலங்களைக் கான விரும்பியது போல் அந்த அறைக் குகையில் இருந்து தவழப் போனான். பாத்திமா, அதன் வாசலை, கையைக் குறுக்காகப் போட்டு அதைக் கதவில்லாத தாழ்ப்பாளாக்கியபோது, அவன் மோவாய் அந்தக் கையில் உரசியது. அவன் பின்வாங்கியபடியே, பசிபட்ட புலிபோல் வார்த்தைகளைப் பாயவிட்டான். ‘என்னைவிட்டுடு பாத்திமா, என்னையும், இந்த ஊரையும் இந்த நிலைக்குக் கொண்டு வந்த டவுன் பயலுவ எத்தனை பேரை வெட்ட முடியுமோ அத்தனை பேரையும் வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன். அதுக்கு முன்னாலே எங்கப்பா... அம்மாவையும், தம்பி, தங்கச்சியையும் பார்க்கணும்னு ஒரு ஆசை. இந்நேரம் எப்படித் துடிச்சிக்கிட்டு இருக்காங்களோ? என்னைக் காணோமேன்னு அப்பாவுக்கு உயிரே போயிருக்கும்." - - மாரியப்பன் ஆவேசமாக வெளிப்பட்டு, தடுக்கப்போன பாத்திமாவையும் ஒரு தள்ளு தள்ளிவிட்டு, பின்புறக் கதவில் துருப்பிடித்த தாழ்ப்பாளை இழுத்துக் கொண்டிருந்தான். அது விலகுமோ இல்லையோ கதவு உடைபடப்போவது போல் , "கீச்" போட்டது. பாத்திமாவால் பொறுக்க முடியவில்லை. என்ன செய்கிறோம் என்றும் புரியவில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில், அவன் கழுத்தைச் சுற்றி இடது கையை வளையமாக்கி அவனைப் பின்பக்கமாக இழுத்தாள். அவன் லேசாய் நிலைகுலைந்து தடுமாறிக் கதவை விட்டபோது, பாத்திமா சட்டென்று பாய்ந்து அந்தக் கதவின்மேல் தன் உடம்பைச் சாத்திக் கொண்டாள். பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை நோக்கி 'உள்ளே போவும். உள்ளே போவும் என்றாள். அவன், ஒரு சர்க்கஸ்காரிக்குக் கட்டுப்பட்ட மிருகம் போலவே பின் பக்கமாய் நடந்து நடந்து, ஏதோ ஒரு அனுமானத்தோடு அந்தக் குகை அறையின் விளிம்பிற்கு வந்ததைப் புரிந்து கீழே குனிந்து அந்தக் குகைக்குள் பின்பக்கமாகத் தவழ்ந்தான். பாத்திமா, கதவில் இருந்து விடுபட்டு, அதன் எதிர்ப்புறச் சுவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/112&oldid=882290" இலிருந்து மீள்விக்கப்பட்டது