பக்கம்:மூட்டம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قبی:)ey/111 சாய்ந்தபடியே நின்றாள். இப்போது அவனுக்கு அவளிடமிருந்தே ஒரு பாதுகாவல் தேவைப்பட்டதைப் புரிந்து கொண்டாள். வெளியே போய் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமென்றால், அதற்குள் இவன் ஓடிவிடலாம். என்ன செய்வது என்று புரியாமலும், பிறகு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று புரிந்தும் அவள், அவனைப் பார்த்தபடியே சுவரில் தலையை அங்குமிங்குமாய் புரட்டினாள். வெளியே ஏற்பட்ட சத்தங்கள் அவர்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலவே வலி கொடுத்தன. 'தண்ணி. தண்ணி என்று குழந்தைகளின் அவலச்சத்தம்... 'பசிக்கி... பசிக்கி’ என்ற பரிதாபச் சத்தம். முன்பெல்லாம் பசி அறியாமல் இருந்த பணக்காரக் குழந்தைகள், இப்போதும் அதன்தாக்கம் புரியாமல் வயிறு வலிக்கி... வயிறு வலிக்கி..." என்று புலம்பும் ஒலச்சத்தங்கள்... பொறுங்க... பொறுங்க... என்ற இயலாமைச் சத்தங்கள். அல்லா அல்லா!! எங்கள் ரப்பே என்ற பரிதாபச்சத்தங்கள் இவற்றை எல்லாம் மீறி ஒரு ஒப்பாரிச் சத்தம். 'என்பெண்ணைக் கொல்லாமக் கொன்னுட்டாங்களே! வாயும் வயிறுமாய் இருந்த மகளை ஆஸ்பத்திரிக்கு போகவிட்ாமத் தடுத்து மயானத்துக்கு அனுப்பிட்டாங்களே! என்ற அலறல். உடனே ஒரு முதியவரின் முதுமைச்சத்தம்... இராக்கால நரிபோல ஊளைச் சத்தம்... வேணுமின்னா இங்கவந்து கொன்னுட்டுப் போங்கடா. இப்படி உயிரோட சித்ரவதை செய்யாதீங்கடா!' என்ற ஒரு பெண்ணின் ஒப்பாரிச்சத்தம். அத்தனை சத்தங்களும் மாரியப்பனிடம் ஒரு ஆவேச தத்தை எழுப்பியது. ஓங்கிக் குரலிட்டபடியே அவன் மீண்டும் வெளிப்படப் போனபோது, பாத்திமா அந்த குகைக்கு ரத்தமும், சதையுமான திரைச்சீலை போல், சாய்ந்து கொண்டாள். அவன் முகம், முதுகில் உரசுவது போல இருந்தது. உடனே இவள் முதுகை வெளிப்பக்கமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/113&oldid=882292" இலிருந்து மீள்விக்கப்பட்டது