பக்கம்:மூட்டம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستشعرع / 112 வளைத்துக் கொண்டாள். பின்பக்கமாய் வாயிருப்பதுபோல, அவனுக்கு பிடரி வழியாக புத்திமதி சொன்னாள். முதல்ல இங்க இருந்து போகனும் என்கிற எண்ணத்தை விட்டுடும் யாரு கண்ணுலயும் படாம தப்பிக்க முடியாது! நின்னாகத்தியால் குத்துவாங்க! ஒடுனாகல்லால அடிப்பாங்க! எங்க ஆட்களுக்கு ஒம்ம மேலே அவ்வளவு பகை அதனாலே இப்ப நீருதப்பிக்கனும் என்கிற எண்ணத்தை விடணும்...' ஐயோபாத்திமா இங்கே இருந்து தப்பிச்சு நான் உயிரோட இருக்கணும்னு ஆசைப்படறது மாதிரி பேசுறியே! அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு இல்ல!... அந்த ஊரையே இப்படி கைகால் வெட்டினது மாதிரி வெட்டிப் போட்ட பயல்கள்ல கைக்கு அகப்படறவன ஒரே வெட்டா வெட்டணுமுன்னுதான் நான் வெளியில போக நினைக்கேன். என்ன விடு பாத்திமா!' பாத்திமா யோசித்தாள். அவனைக் காபந்து செய்து கொண்டு அப்படியே இருக்கவும் முடியாது. அவனை எப்படி முடக்கிப் போடவேண்டும் என்பதும், அதற்கான வார்த்தைகளும் அவளுக்குத் தெரியும். ஆனாலும் எப்படிச் சொல்ல முடியும்? நீரு இந்த வீட்டைவிட்டு ஒடுறதயாராவது பார்த்துட்டால் எங்க குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாங்க? என் மானம், மரியாதையும் ஒம்ம மாதிரியே ஒடாதா ன்னு சொன்னால் அவன் அப்படியே முடங்கிக் கிடப்பான். ஆனால் அப்படிச் சொல்வது அவனையும், தங்களையும் கொச்சைப்படுத்துவதாய் ஆகிவிடுமே என்று யோசித்தாள். அடைக்கலமாக வந்திருப்பவனிடம் குடும்ப மானத்தை தொடர்பு படுத்துவதைவிட அவனைக் கொன்றே போட்டுவிடலாம் என்கிற சிந்தனை. வெளியே சத்தம் வலுத்தது. பயங்கரமாக வலுத்தது. பாத்திமா அவன் பக்கமாய்த் திரும்பிக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/114&oldid=882294" இலிருந்து மீள்விக்கப்பட்டது