பக்கம்:மூட்டம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسمت مع / 115 பார்க்கமுடியாத கரும்பச்சைக் கண்ணாடி ஜன்னல் அடைப்புக்கள். பினனிருக்கையில் வெல்வேட் இருக்கையின் நெருடல் சுகம் அறியாமல், அவள் குமைந்து கிடந்தாள். முன்பக்கம் பார்க்க முடியாதபடி டிரைவரின் முதுகும் அவருக்கு அருகே இரண்டு முதுகுகளும் வழியை அடைத்தன. இதனால் வேறுவழியில்லாமல் அவள் தலைக்குப் பின்னால் கைகளைப் போட்டுப் பின்னிருக்கையில் சாய்ந்தாள். வீட்டுக்குள்ளேயே பித்து பிடித்துக் கிடந்தாள். வீட்டில் , நாலைந்து பேர், சம்சுதீனை அப்பாவின் ஆட்கள் துரத்தியதாக காதும் வாயுமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு மனம் கேட்கவில்லை. என்ன ஆனாரோ? எப்படி ஆனாரோ? அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவனை விட்டுவிடுங்கள். நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறேன் என்று தந்தையிடம் சொல்லக் கூடப் போனாள். முயன்று பார்த்தும் முடியவில்லை. அவள் கோவிலுக்குப் போனால் 'சார்ஜ் ஆகிவிடுவாள் என்பதைப் புரிந்த பழனிவேலுதான் அவளை இந்தக் காரில் அனுப்பிவைத்தார். கூடவே இரண்டு அடியாட்களையும் காவலுக்கோ அல்லது கண்காணிக்கவோ அனுப்பியிருந்தார். கார் இப்போது டவுனுக்கு வெளியே உள்ள தேரிமேட்டைப் பார்த்துப் பாய்ந்தது. கீழே மசூதியும், மேலே முருகன் கோவிலும் உள்ள பாறைமேடு. கல்லூரியில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ரகளையை அவள் நினைத்துப் பார்த்தாள். இன்னும் பத்துப் பதினைந்து பேர் முன்னிலையில் ஷட் அப்” என்று அடிக்காத குறையாகக் கத்திய சம்சுதீனின் 'இஸ்லாமிய ஆணாதிக்கத்தை அவளால் மறக்க முடியவில்லை. ஒருவேளை அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அவள் கல்லூரி கேட்டுக்கு வெளியே, 'அந்த இடத்தில் அதாவது பஸ் நிலையத்திற்கும், கல்லூரி வாசலுக்கும் இடையே வழக்கம்போல் நின்ற போது, அந்த சம்சுதீனும் சாலையின் வேலியான வெள்ளை மணல் பாதையில்- வழக்கமான இடத்தில்- ஸ்கூட்டரை நிறுத்தியி ருந்தால், கூடவே' ஏறிக்கோ என்று என்றைக்கும் சொல்லத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/117&oldid=882300" இலிருந்து மீள்விக்கப்பட்டது