பக்கம்:மூட்டம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قاسلكيميع / 116 தேவையில்லாததை அன்று சொல்லி யிருந்தால், அவள் ஏறியிருக்கலாம். அல்லது ஸ்கூட்டரின் இடது பக்கம் மட்கார்டோடு ஒட்டிக்கிடந்த நிக்கல் கால் பிடியை அவன் நிமிர்த்தியிருந்தால் கூடப் போதும்... குறைந்தபட்சம் அவ ளைப் பார்த்தும் தலையை ஒரு வெட்டு வெட்டாமல் லேசாகச் சிரித்திருந்தால் கூடப் போதும். ஏனோ, ஒருவித மதவாத எதிர்ப்புரட்சி இருவரிடமும் ஏற்பட்டது. அவன் அல்லா, அல்லா, அவளை ஏற்றுவதும் ஏற்றாததும் உன் இஷ்டம் இன்ஷாஅல்லா என்று பிரார்த்தித்தான். இவளும் அப்படியே அபிராமியைப் பிராத்தித்தாள். இப்படி இவர்களின் காதல், அல்லா-அபிராமி யுத்தமாக மாறியபோது, சொல்லி வைத்தாற்போல் பழனிவேலுவே இதே படகுக்காரில் அங்கே வந்தார். காரை நிறுத்திவிட்டு பின்னிருக்கைக் கதவைத்திறந்து மகளைக் கனிவோடு கூப்பிட்டார். அவளுக்கு அழுகை வந்தது. பாருங்கப்பா இவரை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டேங்கார் என்று கூடத் தந்தையின் தோளில் புரண்டு முறையிடவேண்டும் என்பது போலவும் இருந்தது. ஆனால் அந்தத் தந்தையின் கண்களில் தோன்றிய வைராக்கியம், இவளையும் தொற்றியது. சம்சுதீனை நீயும் உன் ஸ்கூட்டரும்’ என்பது மாதிரியே பார்த்தாள். தந்தை வெளியில் நிற்கும் போதே அவள் காரில் ஏறிக் கொண்டாள். வழிநெடுக இஸ்லாமியப் பெண்கள் எப்படியெல்லாம் தலாக்கிற்கு உட்பட்டும் , எதிர்த்துப் பேச முடியமாலும் பெண் எந்திரங்க ளாகச் செயல்படுவதாய், உண்மையையும் பொய்யையும் கலப்படம் செய்து தந்தை சாடைமாடையாகத் தெரிவித்த கருத்துக்களைச் சலனமில்லாமல் கேட்டாள். உடனே அவளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் சஹானுபானு என்ற இஸ்லாமிய இளம் பெண், கணவனுக்கு எதிராய் வழக்கு போட்டதும், அரசியல் சாசனமே அந்தப் பெண்ணுக்கு எதிராய்த் திருத்தப்பட்டதும் நினைவுக்குவர தந்தையை ஆமோதிப்பதாய்ப் பார்த்தாள். இப்போது, காருக்குள் இருந்த அபிராமியால் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. சம்சுதீனைத் திருமணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/118&oldid=882302" இலிருந்து மீள்விக்கப்பட்டது