பக்கம்:மூட்டம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسمت مع / 117 செய்வது என்பது- ஒரு முடியாத முடியக் கூடாத விஷயம் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆனாலும், அவனை மனதில் இருந்து உதற உதற அந்த உருவமும், அவனும் அவளும் சம்பந்தப்பட்ட கடந்த கால சம்பவங்களின் நினைவுகளும் மனதில் தடயத்திற்கு மேல் தடயம் போட்டுக் கொண்டே யிருந்தன. அவள் பின்னோக்கி நினைத்துப் பார்த்தாள். அப்போது கல்லூரிக்கு அவள் புதிது. தாவர இயல் உதவிப் பேராசிரியர் வேலை... எம்.ஃபில். படிக்காமலே தந்தையின் சிபாரிசில் கிடைத்த பதவி. வகுப்புகளுக்குள் இவள் பயந்த தாலோ என்னவோ மாணவ, மாணவியரின் பயமுறுத் தல்களும் அதிகமாயின. ஒருதடவை பி.எஸ்ஸி, பாட்டனி இறுதியாண்டு வகுப்புக்குப் பேராசிரியர் வராததால், அந்தப் பாடத்தை நடத்த வேண்டிய கட்டாயம் இவளுக்கு. ஆண்களும், பெண்களுமான அந்தக் கலப்புக் கூட்டத்தில் முன்கூட்டியே தயாரித்த குறிப்புக்களை துணையாகக் கொண்டு அவள் மகரந்தச் சேர்க்கை பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். பூவில் உட்காரும் வண்டு எப்படி அங்கும் இங்குமாய் பயந்து பயந்து பார்க்குமோ அப்படி, உடனே, ஒரு பயல் எழுந்தான். மேடம், அதோ அவனுக்கு சுயமகரந்த சேர்க்கை பற்றிச் சொல்லிக் கொடுக்கணுமாம்" என்றான். அவள் புரியாமல் விழித்த போது, அதைப் புரிந்து கொண்டு வகுப்பே ஒரே வாயாய்ச் சிரித்து. தாழ்வாரத்தில் போய்க் கொண்டிருந்த ஆசிரியர்கள் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, தங்கள் பங்குக்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு கண்டுக் காமல் போய் விட்டார்கள். இவளோ அத்தனைக் கண்களும் உடம்பை சல்லடையாக்க, அத்தனை வாய்களும் குபிர்ச் சிரிப்பாய்ச் சிரித்து கும்மாளமாய் கைதட்டி இடையிடையே சில அருவருப்பான அபிநயங்களைக் காட்டிய போது, நிலைகுலைந்து சுவரோடு பொருத்தப்பட்ட கரும்பலகையில் சாய்ந்தாள். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டு விரல்களை விலக்கினாள். சம்சுதீனின் குரல்... இதுவரை அவளிடம் 'குட்மார்னிங்', “வணக்கம்' என்பதற்குப்பதிலாக வேறு எதையுமே பேசாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/119&oldid=882304" இலிருந்து மீள்விக்கப்பட்டது