பக்கம்:மூட்டம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் ق بثبوع / 118 அந்த இளைஞனின் குரல். மாணவர்களை தன்னந்தனியாய் எதிர்த்துக் கேட்டான். 'நீங்க நடந்து கொண்டதை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. உங்க அக்காவை இந்த இடத்திலே நிறுத்திப் பாருங்க. ஆர் யூ நாட் அசேம்ட் ஆப் யுவர்செல்ப்? யு கேர்ள்ஸ் யூ டு கேர்ள்ஸ்...!" அந்த வகுப்பு அடங்கியது. அது ஆச்சரியமானாலும் உண்மைதான். ஒருவேளை சம்சுதீன் தமிழில் பேசியிருந்தால் எதிர்த்திருந்திருக்கலாம். பேசியது இங்லீஷ்... அதுவும் கான்வென்ட் உச்சரிப்பில். ஆனாலும் ஒரு பயல் இனிமேல இவ்ங்களுக்கு காதல் வரவேண்டியதுதான் பாக்கி என்று முணுமுணுத்தது சம்சுதீனுக்கும் கேட்டது. அபிராமிக்கும் கேட்டது. இனிமையாகவே கேட்டது .ஆசிரியர் அறைக்குள் வந்ததும் விம்மியழுத இவளை, சம்சுதீன் தான் தேற்றினான். மாணவர்களின் மதிப்பைப் பெற இரண்டு வழிகளில் ஒன்றைக் கையாளவேண்டும் என்றான். முதலாவதாக பாடத்தில் அவர்களுக்கு தெரியாத அம்சங்களைச் சொல்ல வேண்டும். நாம் அவர்களைவிடப் பல மடங்கு படித்தவர்கள் என்ற எண்ணத்தை உணர்ந்த வேண்டும். அவர்களிடம் 'பிஸினஸ்லைக்காகப் பழக வேண்டும். அப்படி திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது போனால், அவர்களோடு சேர்ந்து ஜோக் அடிக்க வேண்டும். பாம்பு தின்கிற ஊரில் நடுத்துண்டு எனக்கு என்கிற மாதிரி.இரண்டாவது வழியைப் பிடிக்காத அபிராமி, அன்றிலிருந்து தாவர இயலில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய புதிய அதிசயச் செய்திகளைத் தேடிப்பிடித்துப் படித்தாள். வகுப்புகளுக்கும் அதைத் தெரியப்படுத்தினாள். இப்போது மாணவர் பார்வையில் அவள் ஒரு அசட்டு அபிராமியல்ல. அசத்தும் அபிராமி. இதற்கெல்லாம் காரணம் யார்... மாணவர்களிடையே கெளரவத்தைத் தேடிக் கொடுத்தது யார்? அபிராமிக்கு இப்படிப்பட்ட சம்சுதீன், கண்ணபிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/120&oldid=882307" இலிருந்து மீள்விக்கப்பட்டது