பக்கம்:மூட்டம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قـتسع /119 போல் அங்கே தோன்றவேண்டும் என்று விருப்பம். அப்படித் தோன்றியிருப்பானோ என்று வெளியே எட்டிப் பார்க்க ஒரு ஆசை. அபிராமி கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கப் போனாள். டிரைவர் பின்பக்கம் திரும்பாமலே ஆணையிட்டார். ஏசி போயிரும்மா திறக்காதிங்க' 'எனக்கு இயற்கைக் காத்துத் தேவைப்படுது. இந்த செயற்கைக் காற்றை என்னால தாங்கமுடியல. அபிராமி, டிரைவரைப் பொருட்படுத்தாமல் இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் நீட்டிக் கண்ணாடிகளுக்குக் கீழே உள்ள நிக்கல் பிடிகளைச் சுழற்றினாள். இரண்டு பக்கமும் கணகளைச் சுழலவிட்டாள். அந்தப் பக்கம் பார்த்தால் இந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நிற்பானோ என்ற சந்தேகம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்தப் பக்கம் நின்றவனைக் கடந்திருப்போமோ என்ற அச்சம். கண்,காது, மூக்குகளை தனித்துவமாகக் காட்டினாலும் தனித்துவத்தை இழக்காத செவ்வக முகம். தலை இலேசாய் செம்பட்டையாய் இருந்தாலும், அந்தச் சிவப்பு முகத்திற்கு அது ஒரு தங்க முடியாகத் தோன்றுவது போன்ற நேர்த்தி... குழைவான பார்வை நிறைவான உடம்பு. அந்த உருவத்தை அந்த முகத்தை நானிருக்கேன் பயம் ஏன்? என்பது மாதிரியான அந்தப் பார்வையை அவளால் உதற முடியவில்லை. வழியில் அவன் முகச்சாயல் கொண்டவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவள் காருக்கு வெளியே கழுத்தைத் தூக்கிப் போட்டாள். பிறகு அது அவன் அல்ல என்று தெரிந்ததும், நீட்டிய கழுத்தை வளைத்துப் பிடித்து உள்ளொடுங்கிப் போனாள். அந்தக் கார், அந்த நகரத்தை ஒட்டியும், ஒட்டாமலும் இருந்த மணல் மேட்டின் மறு பெயரான தேரிமேட்டுப் பக்கம் போனது. அந்த மண் கடலில் தட்டுத் தடுமாறி ஒடி ஒர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/121&oldid=882309" இலிருந்து மீள்விக்கப்பட்டது