பக்கம்:மூட்டம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فسمتسرع / 120 மலைப் பகுதிக்கு போனது. மலை என்று சொல்வது கூடத் தவறு. குன்று என்றும் கூற முடியாது. வெறும் பாறைக் குவியல்கள். அவற்றிற்குச் சிறிது தள்ளி ஏராளமான குடிசைகள். இடையிடையே காரைக் கட்டிடங்கள்... அவையும் முறைப்படியாக இல்லை. அந்தப் பாறை வழுக்கலானது; செங்குத்தானது; ஆனாலும் இடையிடையே கால் பாதங்கள் படும்படியான அளவுக்குச் செதுக்கல்கள்; அந்தப்பாறைக்கு மேலே ஒரு கல் கட்டிடம். அதற்கு வெளியே நான்கைந்து கற்சிலைகள்; ஒரு பெரிய வேல்; அந்தப் பாறைக்குக் கீழே, ஒரு முழத் துண்டு கூட இல்லாத பிள்ளையார்; ஏகாங்கி, கூரையோ கொட்டகையா கிடையாது; மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து போனவர்; தும்பிக்கையில் பாசிப்பச்சை தலையில் பொடிப் பொடியான ஒட்டைகள். ஆனாலும் இவருக்கு தோப்புக் கர்ணம் போட்டுவிட்டுத்தான் அவரது தம்பியைப் பார்க்க வேண்டும். அந்தக் காரில் இருந்து இறங்கிய அபிராமி அதிர்ந்து போனாள். பிள்ளையாரைச் சுற்றி முப்பது நாற்பது பேரைக் கொண்ட கூட்டம்; பேண்ட் ஸ்லாக் காரர்கள்; லுங்கி கட்டிகள்; அந்தக் கலவைக் கூட்டம் பிள்ளையார் சிலையின் அடிவாரத்தை ஒரு இரும்புக் கம்பியால் குத்திக் குத்தி உள்ளே துளைத்துக் கொண்டிருந்தது. சம்சுதீன் அந்தக் கல்லூரி உதவிப் பேராசிரியன், அடிவாரத்துக்குள் நுழைந்த அந்தக் கம்பியின் மறுமுனையைப் பிடித்து நெம்புகோலாக்கி கீழே கீழே தள்ளுகிறான்.அவனுக்கு இன்னும் நான்கைந்து கைகள் ஒத்துழைப்புக் கொடுக்கின்றன. கம்பி கீழே போகப் போக பிள்ளையார் குடைசாய்ந்து அவர்களிடமே அடைக்கலம் தேடுவது போல் குப்புற விழுகிறார். உடனே இன்னொருத் தன், பிள்ளையாரின் தும்பிக்கையில் ஆத்திரம் தாங்காமல் சுத்தியால் அடிக்கிறான். ஆங்காங்கே குடிசைகள் பக்கம், அவற்றைப் போலவே, அன்றாடக் கூலிகள் ஒடுங்கியும் ஒதுங்கியும் நிற்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/122&oldid=882311" இலிருந்து மீள்விக்கப்பட்டது