பக்கம்:மூட்டம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قائيyع/122 புரிந்து கொண்டதுபோல் கரடு முரடான முகங்களில் அழுத்தந்திருந்தமான மீசைகளை வைத்திருந்த குடிசை வாசிகள் அவர்களைத் தடுத்தார்கள். குடிசைப் பக்கம் கோஷாக்களோடு நின்ற பெண்கள் பெண்பாவம் பொல்லாது. வேண்டாம். வேண்டாம் என்று சொன்னபடியே ஓடிவந்தார்கள். ஆச்சரியந்தான். ஒரு பெண்ணுக்கு ஏற்படப் போவது அவர்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறது. அபிராமி, சிறிது விலகி அந்தப்பாறை படிக்கட்டுக்களாய் தோன்றிய கல்வரிசைகளில் மேல்நோக்காய் நடந்தாள். முதலில் மேற்குப்பக்கம் சரிவான பகுதியில் தெளிவாகத் தெரிகிறதே மசூதி...அங்கே போகணும்... அந்த மசூதிதான், ஆஸ்த்துமாக்காரியாக இருந்தவளை ஆரோக்கியமானவளாக மாற்றிய மசூதி. நெற்றிப்பொட்டில் விழுந்த இஸ்லாமிய துவாதான் அவள் நுரையீரலைச் செப்பனிட்டது. அந்த மசூதியைத் தரிசித்துவிட்டு, உச்சிப்பாறைக்கு போய் முருகனையும் தரிசிக்க வேண்டும். அவளைப் பெறாமல் பெற்ற அன்னை அபிராமியின் இன்னொரு பிள்ளைதானே அவன்? அண்ணன் வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதா, வந்ததே அதுக்குத்தானே... நான்கு படிக்கற்களில் ஏறிய அபிராமியின் முன்னால் ஒரு கூட்டம் பக்கவாட்டில் ஏறிக் குறுக்கே நின்றது. சம்சுதீன்தான் இப்போது அந்தக் கூட்டத்துக்குத் தலைவன். அமைதியாகச் சொன்னான்: 'தப்பா நினைக்காதே அபிராமி... ஸாரி...நினைக்காதீங்க அபிராமி...இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட செயல் இல்லை. அயோத்தியில் இடையில் வந்ததாகக் கூறப்படும் மசூதி இருக்கக்கூடாதுன்னா, அதோ பரம்பரையாய் இருக்கிற எங்க மசூதிக்கு மேல பத்து வருஷத்துக்கு முன்னாலே வந்த முருகன் கோவில் இருக்க முடியாது. இப்போ இதை இடிக்கப் போறோம். வேணுமுன்னா என்னைத் துரத்துன உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/124&oldid=882314" இலிருந்து மீள்விக்கப்பட்டது