பக்கம்:மூட்டம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قبیٹھyع / 123 கூட்டத்துக் கிட்ட போய்ச் சொல்லு! அந்தப் பேடிகளை, தைரியமிருந்தால் இங்கு வரச் சொல்லு!” 'சம்சுதீன், நான் சொல்றதைக் கேளுங்க! நாங்க உங்களை ஏத்துக்கிறோம்...நீங்கதான் எங்களை ஏத்துக்கிறதில்லை. இதுதான் பிரச்சினை. தயவு செய்து வழிவிடுங்க.. என்னாலே கோவிலுக்கு போகாமல் திரும்ப முடியாது." . 'நீங்க உங்களத்தான் முக்கியமாய் நினைக்கிறீங்க. எங்களோட உணர்வுகளோ, நான் உயிருக்குப் பயந்து துடிச்ச துடிப்போ உங்களுக்குத் தெரியல; உங்களுக்குத் தெரியவும் தெரியாது; ஏன்னா உங்க மதமே அப்படிப் பட்டது. நான், உங்கப்பன். அந்த முரட்டுப்பயல், ஏவிவிட்ட வேட்டை நாய்கள்கிட்டே இருந்து தப்பிக்கும்போது அல்லாவை வேண்டிக்கிட்டேன். அதோ மேலே இருக்கிற முருகன் கோவிலை இடிச்சிட்டு, அதோ இருக்கிற மசூதியிலே தொழுகை செய்யுறதா அல்லாகிட்டே வேண்டிக்கிட்டேன். உங்களுக்குப் பல கடவுள்கள். ஒண்ணுக்கிட்டே வேண்டிக் கிட்டு அந்த வேண்டுதலை நிறைவேத்தாமல் அதுக்குக் கோபம் வந்தால் , அந்தக் கடவுளை அலட்சியப்படுத்திட்டு இன்னொரு கடவுள்கிட்டே போகலாம். ராமர் இல்லாட்டால், ஈஸ்வரன்...ஆனால் நாங்க அப்படியில்லை. எங்களுக்கு ஒரே கடவுள் அல்லா. அவரை ஏமாற்றி அவரோட கோபத்தை.. எங்களால் தாங்க முடியாது. தயவு செய்து போlங்களா?" சுற்றும் முற்றும் நின்றவர்கள் சிரித்தார்கள். அபிராமி கொதித்துப் போனாள். இந்து மதத்தை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தது அவளுக்கு அழுகையானது. அதையே ஆவேசமாக்கி, அவர்களை முறைப்பாய் முறைத்தபோது, சம்சுதீன் சவாலிட்டான். அந்த முருகன் கோவிலை இடிக்கப் போறோம். வேணுமுன்னா, அந்தப் பேடிப்பயல் பழனி வேல்ையும், அவன் பொட்டைக் கூட்டத்தையும் இங்கே வரச்சொல்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/125&oldid=882316" இலிருந்து மீள்விக்கப்பட்டது