பக்கம்:மூட்டம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاسی شیع /124 அபிராமி சூளுரைத்தாள்: 'முருகன் கோவிலை நீங்க வேணுமின்னா உடையுங்க. இதைப் பத்து மடங்கு பெரிசாக் கட்டி அந்தப் புதுக்கோவிலுக் குள் கான் வரலேன்னா...என் பேரு அபிராமியில்ல. அது மட்டுமில்லே. அந்த மசூதியும், அயோத்தி மசூதி மாதிரி ஆயிடலாம்.' 'நீ உயிரோடு இருந்தாத்தானே இந்தக் கோவிலுக்குள்ளே வரமுடியும்?" சம்சுதீனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒருவன் காட்டுக்கத்தலாய்க் கத்தி அபிராமியின் கழுத்தை நெரிக்கப் போவ்தைப் போல் அதற்கு இருபக்கம் கரங்களைக் கொண்டு போனான். சம்சுதீன், அந்தக் கைகளைக் அல்லாடி அல்லாடிப் பின்னுக்கு இழுக்க போராடிக் கொண்டிருந்தான். இதற்குள் சிறிது தொலைவில் நின்ற கோஷாப் பெண்கள் ஓடோடி வந்தார்கள். அபிராமியை முன்னாலும் பின்னாலும் பிடித்துக் கொண்டு அவளைத்துக்காத குறையாகத் தூக்கி, அந்தக் கார்ப் பக்கம் கொண்டு போனார்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்தது நீங்கள்ளாம் ஆம்பிள்ளை களா? ஒரு பொண்ணைத் தனியாய் அனுப்பிட்டு குத்துக்கல்லு மாதிரி நிக்கீங்களே? மனுசங்களாம் மனுசங்க!' என்றாள் ஒருத்தி. உடனே எல்லாப் பெண்களின் கண்களும் அவர்க ளைச் சுட்டெரித்துவிட்டு அபிராமியின் முதுகைத் தட்டிக் கொடுப்பதுபோல் ஒருத்தி தடவி விட்டதை அங்கீகரித்த படியே, திரும்பிப் போனபோது, அபிராமி காருக்குள் ஏறி அப்படியே குப்புறப் படுத்தாள். இரண்டு கைகளிலும் கண்ணிர் ஒடி முட்டிகள் வழியாக இறங்கியது. கார் நகருவது போலவும் தோன்றியது. அதன் மீது சில கற்கள் விழுவது போலவும், சரஞ்சரமாய்ச் சத்தம் கேட்டது. டிரைவர் பின்பக்கமாகத் திரும்பி ஆறுதல் சொன்னார். 'எல்லாம் நன்மைக்கேன்னு நினைங்க அபிராமியம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/126&oldid=882318" இலிருந்து மீள்விக்கப்பட்டது