பக்கம்:மூட்டம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126/ قدنبع சுெ.சமுத்திரம் தனித்திருக்கப் பயந்து, ஆண் கூட்டத்தோடு சங்கமமானார் கள். வளைக்குள் இருந்து வெளியேற முடியாமலும், அதே சமயம் வெளியே இருந்து போடப்படும் மூட்டம் தாங்க முடியாமலும் தவிக்கும் பெருச்சாளிகளின் நிலைமை. மேற்குப் பக்கமுள்ள கருவேல மரக்காட்டைத் தாண்டிப் போகலாம் என்றால், அந்தக் காட்டுக்குள்ளேயும், அதைத் தாண்டிய ஆற்று மேட்டிலும் பழனிவேலு ஆட்களது நடமாட் டம் இருப்பதாகச் செய்தி. கிழக்குப் பக்கம் உள்ள பொட்டல் காட்டைத் தாண்டினால் அதற்குள் வேலி போலான ஒரு கிராமம். அங்கேயும் பழனிவேலுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்த நிலையில் மசூதி பாளையத்தின் மக்களுக்கு அதற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடைகளில் இருந்த சோடாக்களைக் குடித்தாகிவிட்டது. தாகத்தைத் தடுக்க முடியவில்லை என்றாலும், ஒரளவு தவிர்க்கமுடிந்தது. பசிதாங்காமல் வெங்காயத்தைத் தின்று பார்த்தாச்சு. முளளங்கியை முழுங்கிப் பாத்தாச்சு. அரிசி புளி மிளகாய் கூட இருக்கு. ஆனால் அவற்றை ஆகாரமாய் ரசவாதம் செய்ய ஸ்டவ்வுக்கு எண்ணெய் இல்லை. மசூதிபாளையம் வாரச் சந்தையில் வாங்கிக் கொள்ள நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். சந்தை நடக்கவில்லை. டவுனில் இருந்து வரும் மண்ணெண் ணெய் வண்டி வரவில்லை என்பதோடு, இனிமேல் வருமா என்ற சந்தேகம். ஏழைகளின் வீடுகளில் அடுப்புக்கு விறகு இருந்தாலும் ஆக்குவதற்கு அரிசி இல்லை. மூன்று நாளைக்கு அதைச் சேமித்து வைக்க இயலாத அன்றாடம் காய்ச்சிகள். எல்லாம் இருந்தாலும் தண்ணிர் இல்லை. இப்போது ஒரு கிலோ தங்கத்தையும், ஒரு லிட்டர் தண்ணிரையும் காட்டி யாரிடமாவது இரண்டில் ஒன்று மட்டும் எடு' என்றால், லிட்டர் பாத்திரத்தையே பறிப்பார்கள். அந்த அளவுக்குத் தாகம். தாகப்பட்டுத் தாகப்பட்டு எச்சில் கூட மிச்சமில்லை. இந்த உடல் வாதைகளைவிட அவர்களின் மன வாதை சொல்லி மாளாது. ஒரு சதவீதம் கூட எதிர் பார்க்காத முற்றுகை. நூறில் ஒரு பங்கு கூட இதுவரை அனுபவித் திராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/128&oldid=882321" இலிருந்து மீள்விக்கப்பட்டது