பக்கம்:மூட்டம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فستاyع / 127 அத்தனை கொடுமைகள். மாடுகள் பம்மிக் கிடந்தன. ஆடு கள் அலறின. கோழிகளைக் கண்டு ஒதுங்கிப் போகும் பூனைகள் கூட அவற்றைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கலாமா என்பது போன்ற தாகப் பார்வை. அமீர் கடையிருக்கும் அந்தப் பிரதானத் தெருவில் தெருவடைத்து நின்ற அத்தனை பேர் முகத்திலும் ஒரு பீதி. குரல் கொடுக்க முடியாத இயலாமை. பேசுகிற சொற்கள் ஏறமுடியாத காது இரைச்சல்கள். பம்பரமாய்ச் சுழன்ற தலைகள். ஒருவர் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத தலைச் சுற்றுகள். வயிறுகள் கீழே இழுக்கின்றன. தலைகளோபின்புறமாய் வளைகின்றன. உடம்பு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் உலர்ந்து உலர்ந்து ஈரச்சதைகள் கருவாடாய்க் காய்ந்து போனது போன்ற தோற்றங்கள். இந்தச் சமயத்தில் அந்த ஏழு தெருக்களுக்கும் பயந்துகிடந்த இரண்டு இந்துத் தெருக்களிருந்தும் பலர் பயந்து பயந்து தயங்கித் தயங்கி வந்தார்கள். அந்தத் தெருவுக்கு முன்பு அண்ணாவியாக' இருந்த துரைச்சாமியை, முத்துக்குமார் கைத் தாங்கலாகப் பிடித்து வந்தான். அவர்களுக்குப் பின்னால் வந்த கூட்டம் பயந்து பயந்துதான் வந்தது. ஆனால் ஏழு தெருக்காரர்களும் அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்களே தவிர, எந்தக் கோபதாப சமிக்ஞையையும் ஏற்படுத்தவில்லை. இதனால் சிறிது ஊக்கமடைந்த கூட்டம் மெல்ல நடந்து பிறகு ஓடிப் போய் அந்த முஸ்லிம் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டது. துரைச்சாமி தட்டுத் தடுமாறி கண்னெல்லாம் நீராகப் பேச முடியாமல் பேசினார். 'என் ஆயுள் பரியந்தத்துல இப்படிப்பட்ட அரக்கத் தனத்தைப் பார்க்கலயே! தயவு செய்து இந்துக்கள் எல்லோரும் இப்படி இருப்பாங்கன்னு மட்டும்நினைக்காதீங்க. அப்படி அவங்க இந்துக்களா இருந்தால், ரெண்டு தெரு இந்துக்கள் பாதிக்கப்படுவாங்களேன்னு நினைச்சிருப்பாங்க! உங்கள மாதிரிதான் நாங்களும் பட்டினி! உங்கள மாதிரிதான் தாகத்துல துடிக்கோம்! இப்படிச் சொல்றதுனாலே அங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/129&oldid=882323" இலிருந்து மீள்விக்கப்பட்டது