பக்கம்:மூட்டம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128/ فتى சுெ.சமுத்திரம் மறியல் செய்யற இந்துப் பயலுவ எங்களுக்கு ஏதாவது செய்திருக்கணுமின்னு நான் சொல்றதா நினைக்காதீங்கப்பா. அவங்க அப்பிடி எதையாவது அனுப்பியிருந்தாலும் அதை வீசி எறிஞ்சிருப்போம். எங்க ஊர்க்காரனை இந்தப் பாடுபடுத்தறவன் இந்துவாயிருந்தாலும் அவன் எனக்கு எதிரிதான். எந்த நாட்டிலேயும் இல்லாத அநியாயத்தை பண்ணுறாங்களே. கேக்குறதுக்கு நாதியில்லை. ஒரு போலீஸ் கூட எட்டிப் பார்க்கலயே அய்யோ!' எழுபது வயது துரைச்சாமி அங்குமிங்குமாக தலையை ஆட்டினார். அவர் மகன் முத்துக்குமார் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரது கண்களைத் துடைத்துவிட்ட அtரிடம் புலம்பினான்: ‘எங்கப்பா சக்கரை நோய்க்காரருன்னு உங்களுக்குத் தெரியுமே? வீட்டுல அவருக்குன்னு சப்பாத்தி செய்து வச்சிருக்கோம். சாப்பிடச் சொன்னால் எங்க ஊருக்காரன் ஒருத்தன் பட்டினி கிடந்தால் கூட நான் சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக்கார். அவர வீட்டுக்குக் கூட்டிப் போய் ஒரு சப்பாத்தியையாவது சாப்பிடச் சொல்லுங்க காக்கா. அமீர், துரைச்சாமி முதலாளியின் முதுகைத் தொட்டார். அவரைத் தன்னோடு சேர்த்து நகர்த்தப் போனார். ஆனால், துரைச்சாமியோ அவர் காதில் கிசுகிசுத்தார். என்னைப் பற்றி உனக்குத் தெரியுமில்லை... அமீரு நான் சாப்பிடுவனா? அப்படி சாப்பிட்டா என் வயிறு வாங்கிக்குமா? கடவுளே என் ஊர்க்காரரை பாவிக இந்தப் பாடு படுத்துறாங்களே! போன வருசம் வந்த நோயில நான் போயிருக்கப்படாதா?” அமீரும் முத்துக்குமாரும் அவரை ஆளுக்கொரு பக்கமாய் கைபிடித்து, ஒரு திண்ணையில் உட்கார வைத்தார்கள். காதர்பாட்சா ஓடிவந்து தனது துண்டை எடுத்து அவருக்கு வீசிவிட்டான். கூட்டம் அலைமோதியது. கண்ணுக்குத் துல்லியமாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/130&oldid=882328" இலிருந்து மீள்விக்கப்பட்டது