பக்கம்:மூட்டம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شاسعثيميع / 131 பெண்ணைப் பறிகொடுத்த தாய் பொறி கலங்கி நிக்காள். குழந்தைகள் கண்கள் சாகப் போகிறது மாதிரி சொருகுதுங்க. இவருக்கு இங்கே இருக்கவன்களைப் பற்றிக் கவலையில்ல. எங்கேயோ டவுன்ல... லாட்ஜ்ல பத்திரமாய் இருக்கக்கூடிய சம்சுதீனுக்கு மட்டும் வருத்தப்படுகிறார். இவரெல்லாம் ஒரு இஸ்லாமியன் சீ.சீச்சீ... - இப்போது அந்தக் கூட்டத்தில் அனைவரும் அமீரை ஒரு திடீர்த் தலைவராகவும், காதர்பாட்சாவை ஒரு போர்த் தளபதியாகவும், முததுக்குமாரைக் கூட ஒரு அமைச்சராகவும் ஏற்றுக்கொண்டது போல் ஒரு சேரப் பார்த்தார்கள். அவர்கள் எந்தப் பக்கமெல்லாம் நகர்கிறார்களோ, அந்தப் பக்கமாக நகர்ந்தார்கள். இந்தச் சமயத்தில் பீடித் தொழிலாளர்களான மீரானும் முருகானந்தமும் தங்கள் தோழர்களோடு அந்தப் 'பக்கமாக மொய்த்தார்கள். முன்பெல்லாம் எவரையும் ஒரு பொருட்டாக நினைக்காத அஜீஸ், நூருல்லா வகையறாக்கள் இப்போது தங்களைப் பொருட்படுத்தாத கூட்டத்தில் சாதாரணப் பிரஜைகளாக நின்று கொண்டார்கள். நூருல்லா, அந்தத் தொழிலாளர்களைப் பார்த்து ஒருவரின் முதுகுப்பக்கம் ஒளிந்த படியே, கையெடுத்துக் கும்பிடத் தயாராய் இருந்தார். பீடி முதலாளி நூருல்லாவின் உபயத்தில் இன்னும் வாயில் காயம் ஆறாத முருகானந்தம் ஆவேசமாய்ச் சொன்னான்: 'முற்றுகையிடுகிற கூட்டம் கீழ் வெண்மணியை எரிச்ச சக்தியோட வாரிசுங்க... பாபர் மசூதியை இடிச்ச மனித விரோதிகளின் வால்கள். இவங்க மனிதர்களே இல்ல. அதனால் அவங்களை இந்துக்களாகவோ, வேற மதமாகவோ பார்க்கப்படாது. அவங்க, காட்டுல சாதுவான பிராணிகளை மறிக்கிற ஒநாய்க் கூட்டம். அமீர்பாய், நாம் ஏதாவது செய்யணும். இங்க சாகிறதுக்கு அங்க சாகலாம்.' அமீர், லேசாய் யோசிப்பது போல் கண்கள் பின்னிழுக்க, மோவாய் முன்னிழுக்க ஆகாயத்தைப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/133&oldid=882334" இலிருந்து மீள்விக்கப்பட்டது