பக்கம்:மூட்டம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133/ عyقا-عثع சுெ.சமுத்திரம் முதலில் நடந்தார். அவர், முன்னால் அழுதபடியே நின்ற சம்ரத் பேகத்தை, தோளைத் தட்டிக் கொடுத்தார். மகள் பாத்திமா கண்ணில் படுகிறாளா என்று பார்வையிட்டார். அவளைக் காணவில்லை. மனைவியின் கையை மென்மை யாகப் பிடித்து ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, அவர் தனியாக நடந்த போது, அவருக்கு இருபக்கமும் காதர்பாட்சாவும் முத்துக்குமாரும் சேர்ந்து கொண்டார்கள். அதற்குப் பின்னால் மீரான், முருகானந்தம் வகையறாக்கள். இவர்களுக்குப் பின்னால் பீடித் தொழிலாளர்கள். அவர்களுக்குப் பின்னால் சாதாரண மக்கள். ரயிலுக்குப் பின்பக்கம் போட்ட என்ஜின் போல கடைக்கோடியில், திவான் முகம்மது, நூருல்லா, அஜீஸ் வகையறாக்கள். அந்தக் கூட்டத்தோடு சேரப் போன இமாமை அமீர் கையைப் பிடித்துக் கூட்டிப் போய் துரைச்சாமி முதலாளியின் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு, மீண்டும் ஒடிப் போய்க் கூட்டத்தின் முன்னால் நடந்தார். பின்னால் ஒரு பெண் பட்டிாளமே தெரிந்தது. அவலமான அழுகைகள். 'திரும்பி வாங்க 'திரும்பி வாங்க என்பது மாதிரியான கையசைப்புகள், சத்தம் கேட்டு அமீர் திரும்பவில்லை யானாலும், முத்துக்குமார் திரும்பிப் பார்த்தான். ஒரு கல்லில் ஏறித் திண்ணைத் துணை ஒரு கையால் ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு, மறுகையால் ஆயிஷா கையாட்டினாள். முத்துக் குமாரைப் போக வேண்டாம் என்பதுபோல் இடதுபுறம் இருந்து வலதுபுறம் ஒரு ஆட்டம். வாருங்கள் வாருங்கள் என்பது போல மேலும் கீழும் தலையாட்டு. முத்துக்குமார், அவளுக்குப் பதிலுக்குக் கையாட்டி, வெற்றி என்பது போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டான். தலைகளுக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கியபடி அமீர் இப்போது முத்துக்குமாரிடமிருந்தும், காதர்பாட்சாவிட மிருந்தும் விடுபட்டு முன்னால் நடந்தார். நடந்து கொண்டே இருந்தார். பின்னாலுள்ள கூட்டம் வந்தால் வரட்டும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/135&oldid=882338" இலிருந்து மீள்விக்கப்பட்டது