பக்கம்:மூட்டம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் نخستینوع / 134 நின்றால் நிற்கட்டும் என்பதுபோல் நடந்தார். ஆனாலும் அந்தக் கூட்டத்தின் காலடிச் சத்தங்கள் அவருக்குப் பக்கத்திலும் பக்கபலமாயும் ஒலித்தன. அந்தக் கூட்டம் கால் கிலோ மீட்டர் தூரம் வரை நடந்திருக்கும். திடீரென்று எதிரே குதிரைகள் தெரிந்தன. வெள்ளை வெள்ளையாய் வேன்கள் தெரிந்தன. காக்கி காக்கியாய் ஜீப்புகள் தோன்றின. அமீருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. கடையில் சர்க்கார் இருக்கத்தான் செய்யுது. உதவிக்கு போலீசை அனுப்பித்தான் வைக்குது. முன்னா லேயே அனுப்பியிருக்கலாம். பரவாயில்லை... ஏதோ வந்தாங்களே அதுவே போதும். அமீர் பின்பக்கமாகத் திரும்பாமல் கையைக் கீழே கொண்டு வந்து, கூட்டத்திற்குப் புறங்கை காட்டி நிற்கும்படி சைகை காட்டினார். அவரும் நின்றார். முத்துக்குமாரும் காதர்பாட்சாவும், இரட்டைப் பிறவிகள் போல் நடந்த மீரானோடும், முருகானந்தத்தோடும் முன் வரிசையில் வந்து நின்றார்கள். எதிரே வருகிறவர்களை எதிர் கொண்டு அழைப்பதுபோல் நின்றபோது, அமீர் இருகரம் கூப்பி நின்றார். அவர்களுக்கு இருபதடி இடைவெளியில் ஒயர்கள் பொருத்திய இரண்டு ஜீப்புகளும், அதற்குப் பின்னால் மூன்று போலீஸ் வேன்களும் அவர்களை மோதாக் குறையாக ஓடிவந்து நின்றன. பக்கவாட்டில் குதிரைப் போல்சார். வேனில் இருந்தவர்கள், ஒரு கையில் லத்திக்கம்போடும், இன்னொருகையில் கல்லெறியைத் தாங்கும் மூங்கில் கேடயத்தோடும் ஒரு வேனில் இருந்து கீழே குதித்தார்கள். இன்னொரு வேனில் இருந்து துப்பாக்கி தரித்த போலீசார்; குதிரைகள் முன்கால்களைத் தூக்கி அங்கும் இங்குமாய் லாகவமாய்த் துள்ளின. ஒயர் பொருத்திய போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு ஆஜானுபாகு மூன்று நட்சத்திரக்குறி மனிதர் கீழே குதித்தார். எடுத்தவுடனேயே அதட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/136&oldid=882340" இலிருந்து மீள்விக்கப்பட்டது