பக்கம்:மூட்டம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فسكيyع / 136 பெரிசா ஏன்யா பராக்கு பாக்கிங்க, சுடுங்கய்யா உங்க துப்பாக்கி எத்தனை பேரை சுடுதுன்னு பார்ப்போம்.' அந்த மனிதப் போலீஸ் அவர்கள் ஆற்றாமையில் பேசியதை அறியாமையில் பேசியதாகக் கூட நினைக்க வில்லை. ஏதோ வெளிநாட்டுப் படை ஒன்று ஏகே-47 வகைத் துப்பாக்கிகளோடு தமிழகத்தில் தக்காரும் மிக்காரும் இல்லாத போலீஸ் படைக்கு சவால் விடுவதாகவே நினைத் தார். ஒரு பக்கமாய்ப் புலிப் பாய்ச்சல் ஆயத்தத்தோடு நின்ற போலீசாரைப் பார்த்து 'டியர் கேஸ், டியர் கேஸ் என்றார். உடனே அவரது 'டியர் போலீஸ் தொண்டர்களில் ஒரு பகுதியினர் ஒரு போலீஸ் ஜீப்பின் பின்பக்கமாக உள்ள இரும்புப் பெட்டிகளில் இருந்து ஈயம் மாதிரியான சதுரக்கட்டையை எடுத்தார்கள். மூன்று சின்னச் சின்ன கட்டங்களைக் கொண்ட அவற்றை எடுத்து கூட்டத்தின் முன்னாலும் கூட்டத்திற்குள்ளும் எறிந்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றும் தரையில் நேராக விழுந்தது. இரண்டு பக்கங்களில் தெறித்தது. பின்னர் புகை புகையாய் மூச்சு விட்டது. எங்கும் கரும்புகை, அடுப்புக்கரி நிறத்தில்ான கரும்புகை, காடே எரிந்து கரும்புகையானது போன்ற பெரும்புகை, கண்ணிர்ப்புகை. மாறி மாறி ஆற்று நீர்ப்பாய்ச் சலிலிருந்து மீன்கள் துள்ளித் துள்ளித் தரையில் தாவுவது போன்ற புகைக் குண்டுகள். அந்த மக்கள் அங்கும் இங்குமாய்ச் சிதறினார்கள். 'கண்ணு போச்சே! கண்ணு போச்சே!” என்று கதறினார்கள். இதற்குள் இத்தகைய பல போராட்டக் களங்களைப் பார்த்த பீடித் தொழிலாளர்களில் சிலர் (இவர்கள் வெளியூர் ஆலைகளிலி ருந்து பழிவாங்கப்பட்டு, துரத்தப்பட்டு பீடி பேக்டரியில் சேர்ந்தவர்கள்) துள்ளி வந்த ஒரு சில புகைக் குண்டுகளை, கைகளை வேல் வீச்சாய் வீசி, அவை தரையில் விழுவதற்கு முன்பே தாங்கிப் பிடித்து, பிடித்த வேகத்திலேயே போலீசை நோக்கி அந்த குண்டுகளைத் திருப்பி எறிந்தார்கள். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/138&oldid=882344" இலிருந்து மீள்விக்கப்பட்டது