பக்கம்:மூட்டம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் 12 / نسائيمنع இதுதான் சாக்கு என்று ராமலிங்கம் பேசப்போனார். இதற்குள் திவானின் கவனம் கலைந்தது. ஒரு நாற்பது வயது அய்யப்ப பக்தர்...காக்கா கறுப்பு வேட்டி, அதைவிட கட்டிக் கறுப்பான சட்டை, கழுத்தில் துளசி மாலை, தோளில் ஒரு குழந்தை. முன்னால் போன மனைவியிடம் குழந்தையை நீட்டிவிட்டு மசூதிக்கு வெளியே ஒதுங்கப் போனார். ஆனால், அவர் மனைவி அந்த வாசலில் நின்றபடி ஒரு முறைப்பு முறைத்ததால், அவர் ஒடுவதுபோல் நடந்து அவளையும் தாண்டி மசூதிக்குள் போனார். ஆனாலும் பெண் வாடைபடாத இடம் என்று ஒன்றை அவரே அனுமானித்துக் கொண்டு தனித்து நின்றார். அவரைப் பார்த்து லேசாய்ச் சிரித்த திவான் மீண்டும் ராமலிங்கத்தைப் பார்த்தபோது, ராமலிங்கத்திற்கு அது நல்ல சகுனமாகப் பட்டது. ராமலிங்கம், பேச்சை எப்படித் துவக்குவது என்று யோசித்து எதிரே பார்த்தார். மசூதிக்கு இருநூறு அடி தள்ளி காதர் பாட்சாவும் முத்துக்குமாரும் ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். காதர் பாட்சா, ஒரு லுங்கியை அது தேவையில்லை என்பது போல தூக்கிப் பிடித்துக் கொண்டு கரடு முரடான ஒரு மோட்டா சட்டையை தடவிவிட்டபடியே, முத்துக் குமாரை தோளில் தட்டி எதையோ பேசிச் சிரித்தான். அவனைப் போலவே இருபத்தாறு வயது இளைஞனான முத்துக்குமார் பேண்ட் போட்ட ஒரு சிலாக்கன். அதன் காலரைத் திருகியபடியே பாட்சாவைப் பார்க்காமல் எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்தான். அங்கே பப்பாளிப்பழம் ஒன்று பதியம் போட்டது போல் திடீரென்று தோன்றியது. பிறகு அதற்குக் கால் கை முளைத்து ஒரு கொடியாய் ஆனதுபோல் கதவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/14&oldid=882348" இலிருந்து மீள்விக்கப்பட்டது