பக்கம்:மூட்டம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0கசமுத்திரம் فستیوع /138 துளைத்து, அப்புறம் ஆள் கிடைக்கிறதா என்று தேடி ஒரு பொட்டல் பக்கமாய் விழுந்திருக்க வேண்டும். அமீரும் முத்துக்குமாரும் ஒற்றை மனிதர் போல் ரத்தக் குழம்போடும், பிய்ந்து போன சதைகளோடும் பிணமாய்க் கிடந்தார்கள். அமீரின் தலையைத் தாண்டிய இடத்தில் ரத்தம் திரவ நிலையிலிருந்து திடப்பட்டு சிவப்புக் கல்லாய் ஒளிர்ந்தது. முத்துக்குமாரின் மார்பிலிருந்து நீரூற்றாய்க் கிளம்பிய குருதி அவன் கால்வழியாக ஆறாய் ஒடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சிலர் சுருண்டு கிடந்தார்கள். ஆனாலும் உயிருக்கு ஆபத்தில்லாதவர்கள் போல் அங்கு மிங்குமாய் நெளிந்தார்கள். அப்படியே உட்கார்ந்த காதர் பாட்சாதோளைப் பிடித்துக் கொண்டே, தனது தோழர்களைப் பார்த்து நடந்தான். ஒருவரின் பிடரியையும் இன்னொருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து அப்படியே வளைந்து நின்றான். அவன் தோளில் பொங்கிய ரத்த ஊற்று அந்த முன்னாள் மனிதர்களின் பாதங்களிலும், தலையிலும் சொட்டுச் சொட்டாய்த் தெறித்துக் கொண்டிருந்தது. இதற்குள் அங்குமிங்குமாய்ச் சிதறிய கூட்டம் நடந்ததை நம்பமுடியாமல் உற்று உற்றுப் பார்த்தது. பிறகு முடியாதது நடந்து விட்டதுபோல் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்க்கூடிக் கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசை நோக்கி எறிந்து கொண்டே இருந்தது. உடனேகுதிரைப்படை போலீஸ் லத்திக் கம்புகளோடு அங்கும் இங்குமாய் பாய்ந்தார்கள். குதிரைகளை, கடிவாளத்தைப் பிடிக்காமலேயே தாவ விட்டார்கள். அங்குமிங்குமாய்க் கம்புகளைச்சுழற்றினார்கள். ஆங்காங்கே ஒரு சில தலைகள் சிவப்பாகிக் கீழே விழுந்து கொண்டிருந்தன. எதிர்த் திசையிலிருந்து பெண்கள் கூட்டம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலைமோதி ஓடிவந்தது. தொலைவில் உள்ள முற்றுகைக் கூட்டமும் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்து வந்தது. அதுவரை கால எமதுதர்களாய்ச்செயல்பட்டபோலீசார் இப்போது முதலுதவி மருத்துவர்களானார்கள். ஆங்காங்கே துள்ளத் துடிக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/140&oldid=882350" இலிருந்து மீள்விக்கப்பட்டது