பக்கம்:மூட்டம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் فسات مع / 139 கிடந்தவர்களை தட்டுமுட்டுச் சாமான்களைத் துக்கிப் போடுவதுபோல் ஸ்டெச்சர்களில் தூக்கி, ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். அந்த போலீஸ் மனிதர், கீழே கிடந்த தோட்டா உறைகளை எடுத்து எண்ணிக் கொண்டி ருந்தார். அவருக்கு செத்தவர்களின் எண்ணிக்கையை விட செலவான தோட்டாக்களின் எண்ணிக்கையே முக்கியமானது. விலை உயர்ந்த தோட்டாக்கள். இந்த சாக்கில் எவனும் பிறத்தியாருக்கு விற்றுவிடக் கூடாது. ஒவ்வொருத்தனும் எத்தனை ரவுண்டு சுட்டான் என்று அப்புறமாய்க் கணக்கு கேட்க வேண்டும். வன்முறைக்கும்பல் ஒன்று காவலர்களைத் தாக்கியதால், அந்தக் காவலர்களே வேறு வழியில்லாமல் குறைந்த பட்ச சக்தியை உபயோகித்து, ஒரு கொடிய சதியை மிகச் சிறிய உயிரிழப்பிலே அடக்கிவிட்டார்கள் என்று பத்திரிகையில் எழுத வைக்க வேண்டும். முதலமைச்சரும் சட்டப் பேரவையில் கண்ணை மூடிக் கொண்டு படிக்க ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஸ்பாட்டில் இல்லாத தாசில்தாரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்தான் சுடும்படி உத்தரவிட்டதாகக் கையெழுத்து போடவைக்க வேண்டும். காயம்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவமனையில் ஏதாவது சித்து வேலை செய்ய வேண்டும். அந்த மூன்று நட்சத்திர போலீஸ் மனிதரிடம், இரண்டு நட்சத்திர சகாக்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த போது, மசூதி பாளையத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த பெண்கள் கூட்டத்தில் முன்னால் ஓடிவந்த சம்ரத் பேகம் குப்புறக் கிடந்த அமீரை, அப்படியே வெறித்துப் பார்த்தாள். பிறகு அடியற்ற மரமாய் அவர்மேல் விழுந்தாள். அவர் முதுகில் அங்கும் இங்குமாய் முகம் புரட்டி வட்டக் கிணறாய் இருந்த ரத்தக் கிணற்றில் மூழ்கி ரத்த முகமாய் அரற்றினாள். பிறகு அப்படியே மயங்கி விழுந்தாள். ஆயிஷா மல்லாக்கக் கிடந்த முத்துக்குமாரையே கண் நிலைக்கப் பார்த்தாள். ஏங்கி ஏங்கி அழுதாள். 'என்னை விட்டுட்டு போயிட்டியே என்று வெளிப்படையாய்க்கூட அழமுடியாத கொடுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/141&oldid=882352" இலிருந்து மீள்விக்கப்பட்டது