பக்கம்:மூட்டம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140/மூட்டம் சுெ.சமுத்திரம் மல்லாக்கக் கிடப்பவனை மார்போடு சாய்த்து முட்டி மோதி அழுது அழுது, அவன் ரத்தத்தையும் தன் கண்ணிரையும் கலக்க முடியாத இயலாமையில் தவித்தாள். ஒருவேளை அவளும், அவன் மீது அப்படியே படர்ந்திருப்பாள்; அதற்குள் ஹாஜி அஜீஸ் அவளைப் பற்றி இழுத்தார். முன்பு ஒரு முறை பற்றிய அந்த வேகம் கையில் இல்லை. 'என்னைப் பிடித்துக் கொள்' என்பது மாதிரி அந்தக் கை ஆறுதலாகவும், ஆறுதல் கேட்டும் பிடித்தது. மகளை மார்போடு சேர்த்து நகர்த்தினார். துரைச்சாமி தத்தித் தத்தி வந்தார். இரண்டு பிணங்களையும் கண்கள் ஆடாமல் பார்த்தார். வாய் மட்டும் துடித்தது. அங்குமிங்குமாய் தலை ஆடியது. பிறகு அமீரின் மேல் கிடந்த சம்ரத் பேகத்தின் கையைத் தொட்டார். அவள், 'காக்கா! காக்கா என்று அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள். எல்லாம் அட்ங்கி எல்லாம் முடிந்திருந்தது. காதர்பாட்சா வையும் வேனில் தூக்கிப் போட்டார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டறக் கலந்து நின்றார்கள். பழனிவேல், அந்தப் போலீஸ் மனிதருக்கு சங்கரசுப்பு சாட்சியாய் பட்டும் படாமலும் கைகொடுத்துக் கொண்டிருந்தார். போலீஸ் வேன்கள் பிரேத வண்டிகளாய்த் தோற்றம் காட்டியபோது, பாத்திமா போட்ட சத்தம் அனைவரையும் சுண்டி இழுத்தது. எங்கிருந்து வருகிறாள் என்று எல்லோரும் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அவள் அப்பாவின் உடம்பில் அப்படியே விழுந்தாள். ‘வாப்பா வாப்பா என்று வாய் பேசியது. அந்த வாப்பாவை மல்லாக்கக் கிடத்தினாள். அவர் முகத்திலும், கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவர் கழுத்தில் கைகளை வளையமாக்கி மடியில் போட்டாள். மாறிமாறித் தலையில் அடித்தாள். எவருக்கும் அவளைப் பிடித்திழுக்க தைரியமில்லை. எல்லோரும் வாயடைத்தும், ஒருசிலர் கண்ணடைத்தும் நின்றபோது, மாரியப்பன் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். அமீர் பாய்! அமீர்பாய்! என்னைப் பெறாமப் பெத்த அப்பனே! என்று புலம்பிக் கொண்டே வந்தான். கீழே விழுந்து கிடக்கும் இன்னொரு பிணம் அவன் கண்ணில் படவில்லை. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/142&oldid=882354" இலிருந்து மீள்விக்கப்பட்டது