பக்கம்:மூட்டம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قلت مع / 141. அமீரின் சடலம் மட்டுமே அவன் கண்களை முள்ளாய் அழுத்தியது. ஊசியாய்த் தைத்தது அமீர் பாய்! அமீர்பாய்! ஐயய்யோ அமீர் பாய்!...' பாத்திமா, பழக்கப்பட்ட சத்தம் கேட்டதுபோல் திரும்பினாள். அவனைப் பார்த்து மெல்ல மெல்ல எழுந்தாள். பிறகு அவன் மேல் அப்படியே சாய்ந்தாள். அவன் கழுத்தை அப்படியே கட்டிக் கொண்டாள். அவன் அவள் தோளைச் சுற்றிக் கொண்டான். ஒருவர் கீழே சாயாமலிருக்க இன்னொருத்தர் பிடித்துக் கொண்டது போன்ற பி.டி... இனிமேல் எப்போதும் ஒருவரை ஒருவர் விடப் போவது இல்லை என்பது மாதிரியான பிடி; அந்தக் கணத்தில்... எல்லா இந்துக் கண்களும், இஸ்லாமியக் கண்களும் தலைகீழாய்ப் பார்த்தன. தரையைத் துளைத்தன. பிறகு அந்த இரண்டு பேரையும் பார்த்துப் பார்த்து மனிதக் கண்களாய் நிமிர்ந்து கொண்டிருந்தன.

k
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/143&oldid=882355" இலிருந்து மீள்விக்கப்பட்டது