பக்கம்:மூட்டம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சுெ.சமுத்திரம் فهمتعلم/13 திறந்துகொண்டு வெளியே வந்து அங்குமிங்குமாய் நட மாடிக் கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் ராமலிங்கத்திற்கு, இது சுப சகுனமா, அல்லது அப சகுனமா என்று தெரிய வில்லை. ஆனாலும், அவர்களையே மூலதனமாக வைத்துப் பேச்சைதுவக்குவது என்று தீர்மானித்து அதோ பாருங்க பாய்...காதரு இன்னிக்கு தொழுகைக்கு வாரது ஆச்சரியமாயிருக்கு, என்ன விசேஷம் ? அப்படியே வந்தாலும் ஒரு மட்டு மரியாதை வேண்டாம். தலையில் ஒரு குல்லா வேண்டாம். அதோ பாருங்க...அந்த முத்துக்குமாருப் பய கண்ணு எந்தப் பக்கமா போகுது பாருங்க. நானும் பாக்கேன். தினமும் அந்தப் பய அதே இடத்துல வந்து காக்கா கண்ணா பாக்கான். இதுக்கு இந்த காதர் ப்ாட்சா உடந்தை. நீங்க ஏதாவது செய்யணும்.' திவான் முகமது, அந்த ஆண் ஜோடியையும், அதற்கு எதிர்பக்கம் கோஷா போடாமலே தலையைக் காட்டிய ஆயிஷாவையும் நோட்டமிட்டார். உடம்பு இயல்பாக எரிந்தாலும், அந்த ஹாஜி அஜீஸ்-க்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்பது மாதிரியான ஒரு திருப்தி, அதே சமயத்தில், நிலைமையை, பார்வையைத் தாண்டிப் பழகும் கட்டத்திற்கு விட்டுவிடக்கூடாது என்ற ஒரு பொறுப் புணர்ச்சி. அவர்களைப் பார்க்கப் பார்க்கத் தான் ஒரு ஜமாத் தலைவர் என்கின்ற எண்ணமும் கூடவே வந்தது. ராமலிங் கத்தைப் பார்த்துப் பட்டும் படாமலும் பேசினார். 'எல்லாம் எங்க காதர் பாட்சாவால...அவனுக்கு இது தெரியாமலா இருக்கும்? ஏதாவது தட்டிக் கேட்கலாமுன்னா எதிர்த்துப் பேசுவான். நீயாவது முத்துக்குமாருட்ட கொஞ்சம் சொல்லேன். 'நான் சொல்லாம இருப்பேனா பாய்? அவன் அப்பன் துரைசாமிகிட்ட சொல்லி கையக் கால கட்டி போடும்படியா சொல்றேன். அப்புறம் காக்கா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/15&oldid=882365" இலிருந்து மீள்விக்கப்பட்டது