பக்கம்:மூட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستنوع / 16 'என்ன பாய் சொன்னிங்க? தொழுகையை மேல் மாடிக்குக் கொண்டு போlங்களா. கீழ்த் தளத்து எல்லைச் சுவரை இடிச்சுட்டு ஷட்டர் போடணுமா?" திவானும் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பேசினார். 'உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ராமு. ஷட்டருதான் போடணும்.' இப்போது அமீர் குறுக்கிட்டார். 'ஷட்டர் வேண்டாம். மூச்சு முட்டும். ஒத்தை செங்கலுல சுவர் எழுப்பிடலாம்.' அப்ப மட்டும் மூச்சு முட்டாதா?’ 'சொல்றத முழுசா கேளுங்க ,ாமலிங்கம். மேல் கூரை 'பீமுக்கும் சுவருக்கும் இரண்டடி இடைவெளி விட்டுட்டா எப்படி மூச்சு முட்டும்?" திவான் முகமது அவர்களுக்குள் நடந்த பேச்சுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவர், திடீர்த் தாக்குதல் போல் பேசினார். இடைவெளி விடுறது இஸ்லாமுக்கு விரோதம். ‘எப்படி விரோதம்? நம் பெண்டு பிள்ளைகள இங்கே கீழ்த்தளத்துக்கு வரவழைச்சு, மேல் தளத்துல அப்பப்ப நடக்குற உபதேசத்தை கேட்க வைக்கணும்னு ஜமாத்து முடிவு செய்துட்டு. அதனால்தான் மாடியே கட்டறோம். இங்கேயும் அவங்கள ஜெயிலுல வைக்கறது மாதிரி ஷட்டர் போடணும்னு சொல்றீங்களே.' 'என்ன பேச்சு பேசற அமீர் பிறத்தியான் பார்க்கலாமா?" 'பிறத்தியார நாம பாக்கலையா? பிறத்தியான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/18&oldid=882370" இலிருந்து மீள்விக்கப்பட்டது