பக்கம்:மூட்டம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் شستشعاع / 18 தர்காவிற்கும் இடையே அதன் வெளிக்கோட்டில் ஹவுதுசெவ்வகத் தொட்டி, பச்சைப் பசேலென்று கருணைக் கடலின் அணுத்திரட்சியாய்க் கண் சிமிட்டியது. பாசி படர்ந்த உட்சுவர். ஆன்மீகம் வழுவழுப்பானது என்பது போன்ற தோற்றம். ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் நின்று ஒரு ஈயப் போணியை எடுத்து நீரேற்றி, முன் கைகளைக் கழுவினார்கள். முட்டிக் கால்களில் மிச்ச மீதியின்றி அள்ளிப் போட்டார்கள். பிறகு வாயை மூக்கோடு சேர்த்து அலசி தொப்பியையோ, அல்லது கட்டிய கைக்குட்டையையோ எடுத்துவிட்டு தலையை ஈரக்கையால் அலசி விட்டபடி சரஞ்சரமான பெண்களையும், இடையிடையே அழுது தீர்க்கும் குழந்தைகளையும் ஒப்புக்குக் கூட பார்க்காமலேயே தொழுகைத் தளத்திற்குள் நுழைந்தார்கள். திருக்குரான் கூறும் 'அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லா வின் திருப்பெயரை இதயத்தில் வைத்தபடியே, அந்தத் திருப்பெயர் இதயத்திலிருந்து ஒளிக்கீற்றாய் உதடுகளைப் பிரகாசப்படுத்தியதுபோல் அனைவரும் தொழுகைத் தளத்திற்குள் போனபோது-- கால் கைகளை அலம்பிவிட்டு, சம்சுதீன் அந்த தர்காவை நிமிர்ந்து பார்த்தான். அதன் மேல் விதானம் அபிராமி கோயிலின் கோபுரக் கலசம்போல் தெரிந்தது. அதன் உச்சியிலுள்ள பிறை நிலவும், அவனுக்குப் பிறைசூடிய பித்தனின் கோயிலை நினைவுக்குக் கொண்டுவந்தது. அபிராமி வணங்கும் கடவுள்...இப்போது அவளும் அந்தக் கோயிலில் நிற்பாள்...சீக்கிரமாய்த் தொழுகையை முடித்து விட்டுப் போக வேண்டும். கோயிலைத் தாண்டிய பூங்காவில் காத்திருப்பாள். சம்சுதீன் தொழுகைத் தளத்திற்குள் நுழையாமல், அப்படியே குன்றி நின்றான். ஒரு பெண்ணைப் பற்றிய எண்ணம், அவள் யாராக இருந்தாலும் அவளைப்பற்றிய எண்ணம் இப்போது, இந்தத் தொழுகையின் சமயத்தில் வருவது தன்னுள் இருக்கும் இறை நம்பிக்கையான ஈமானைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/20&oldid=882375" இலிருந்து மீள்விக்கப்பட்டது