பக்கம்:மூட்டம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قدساتيkey 20 முனுப்போ, சின்ன சத்தமோ எழவில்லை. தலைகுனிந்து இருந்த அத்தனை பேரிடமும் ஏதோ ஒரு மவுனதாகம். ஒரு பக்தி வேகம்...ஒரு நம்பிக்கை ராகம். நீண்ட நெடிய கோரைப் பாய்களை சின்னச் சின்னத் தட்டுப் பாய்களாய்க் காட்டும் தொழுகையாளர்களுக்கு முன்னால் இமாம் தனித்திருந்தார். மற்றவர்களைப் போல் வட்டவட்டமான பக்தித் தொப்பியோ, கிரிக்கெட் தொப்பியோ, குறைந்த பட்சம் காந்தி குல்லாவோ போடாமல் வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டையுடன் ஒரு வெள்ளைத் தலைப்பாகை கட்டிய ராமலிங்க சுவாமிகள் மாதிரியான தோற்றம். அவருக்கு முன்னால் கஃபா என்னும் கடவுள் ஆலயம் இருக்கும் மேற்குத் திசையை மனதில் பதிய வைக்கும் ஒரு திரைச்சீலை...மேலே சிறுத்து, கீழே பருத்து உள்ளடங்கிய சுவர்ப் பகுதிக்கு உடை போட்டது மாதிரியான பச்சைத் துணி, அங்குமிங்கும் ஆடாமல் அசையாமல் அசைவற்றும் அசைவித்தும் ஒரு கம்பீரமான கருணைத் தோற்றத்தைக் காட்டும் பச்சை வண்ணம்... இமாம் எழுந்தார். அவரோடு சேர்ந்து மற்றவர்களும் எழுந்தார்கள். சாத்தான் எச்சில் உமிழும் இடமாகக் கருதப்படும் தொப்புளில் இரண்டு கைகளையும் மடித்து அனைவரும் எழுந்தனர். பிறகு காதுகளில் கரங்களைச்சாய்த்து வைத்து அப்படியே மண்டியிட்டு நெற்றி தரை தட்டக் குனிந்தார்கள். அது மாலைத் தொழுகையான 'மக்ரீப் என்பதால், ஏழு தடவை ரகாயத் செய்து தொழுகை முடித்தனர். மனக்கடல்கள் இப்போது அலை எழுப்பவில்லை. அந்த அலைகள் இல்லாத அலையற்ற ஆழ்கடலுக்குள் போனதுபோன்ற ஏகாந்தம்; மூச்சு முட்டாத அடிவாரத்திலிருந்து வாழ்க்கையின் சேதாரங்களைப் பொருட்படுத்தாதது போன்ற ஒரு ஒருமை. சம்சுதீன்கூட, வலுக்கட்டாயமாக வந்த அபிராமியின் எண்ணத்தை மறக்கடிக்க அவளது சின்னச் சின்னக் குறைகளைக் கூட தன்னையறியாமலேயே நினைத்துப்பார்த்து, இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/22&oldid=882378" இலிருந்து மீள்விக்கப்பட்டது