பக்கம்:மூட்டம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ.சமுத்திரம் قساتyع / 21 அல்லாவிடம் அப்படியே ஒன்றிவிட்டவன் போல் கண்கள் சொருக நின்றான். அத்தனை தொழுகையாளர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தார்கள். அவர்களில் இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஒதுங்கிவிட்டு தர்காவிற்குள் போனார்கள். நடுத்தர மனிதர்கள் அந்தப் பெண் கூட்டத்தின் பக்கத்தில் வந்தார்கள். ஒவ்வொரு குழந்தையையும் உற்று உற்றுப் பார்த்துவிட்டு அதனதன் நெற்றிப் பொட்டிற்கருகே வாயைக் குவித்து ஊதி துவா சொன்னார்கள். இப்படிப் பத்து பேர் ஊதி விட்டார்கள். ஆனாலும் பெண்கள் கூட்டம் பிரியவில்லை. தொழுகைத் தளத்திலிருந்து படி இறங்கும் இமாமையும், அமீரையும் அவர்கள் கண்கள் மொய்த்தன. இமாமும் அமீரும், எல்லா வஸ்துக்களின் பேரிலும் சக்தி வாய்ந்த யாதொரு இணையுமில்லாத அல்லாவை நினைத்தபடியே அந்தக் குழந்தைகளை நெருங்கினார்கள். அப்போது மவுனத்தைக் கலைக்கும் காலடிச் சத்தம்; பத்து பதினைந்துபேர் உள்ளே நெருக்கியடித்து ஓடி வந்தார்கள். யாரிடம் முதலில் செல்லலாமென்பது போல் அவர்கள் கண்கள் அங்குமிங்குமாய் அலைபாய்ந்தன. அல்லாவை நினைக்கும் போதும், அவர் பெயரில் காரியம் ஆற்றும்போதும் கவனம் கலையக்கூடாது என்ற திருக்குரான் ஆணைப்படி காலடிச் சத்தங்களைப் பொருட்படுத்தாமல் துவா செய்த இமாமுக்கும், அமீருக்கும் காத்து நிற்பது போல் நின்றார்கள். பிறகு அது வரைக்கும் காத்திருக்க முடியாது என்பதுபோல், அந்தப் பக்கமாக வந்த திவான் முகமதுவிடம் ஒருத்தர் உரத்துக் கத்தினார். 'அயோத்தியில் பாபர் மசூதிய தரைமட்டமாக்கிட்டாங் களாம். 'காபீர்கள் நம்ம மசூதியை தவிடுபொடியாக்கிட்டாங் களாம்...ஒ...அல்லா தர்காவிற்குள், ஒரு ஜிப்பா மனிதரின் மயிலிறகிற்கு முகங்கொடுத்த இளவட்டங்கள் ஓடி வந்தார்கள். மசூதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/23&oldid=882380" இலிருந்து மீள்விக்கப்பட்டது