பக்கம்:மூட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قسبتعلم/22 விட்டு விலகி வீட்டுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த வளாகத்தில் அங்குமிங்குமாய்ச் சிதறி நண்பர்களோடு குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த அத்தனை பேரும் தாவித் தாவி, குதித்துக் குதித்து அந்தப் பக்கமாய் வந்தனர். அத்தனை பேருக்கும் நடந்ததை நம்ப முடியவில்லை. ஆகாயத்தையே பார்த்தார்கள். சேதி: சொன்னவர்களை சிலர் திடுக்கிட வைத்தும் தலைப்பாய்த் துண்டை சடைபோல் முதுகில் போட்டிருந்த இமாமை, திடுக்கிடப் பார்த்தார்கள். இமாம், கண் விழிக்காமலேயே அசந்து நின்றார். திவான் முகம்து மலைத்துப் போனார். அமீர், ஆதரவுக்காக காதர்பாட்சாவைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தார். இதற்குள் மசூதி இருந்த அந்தத் தெருவின் இரு பக்கமும் உள்ள கடை கண்ணிகளில் இருந்தவர்களும் உள்ளே வந்தார்கள். கூட்டம் மசூதியிலிருந்து தெரு வரைக்கும் நீண்டு கொண்டே போனது. பெண்கள் திண்ணைத் தூண்களில் சாய்ந்து பாதி கோஷாக்களோடு விவரம் புரியாமல் நின்றார்கள். மசூதிக்குள் ஒரே கூக்குரல். அல்லா அல்லா என்ற அவலச் சத்தம். இன்சா அல்லா என்ற தெளிவுச் சத்தம். ஒவ்வொருவருக்கும் தத்தம் வீடே இடிக்கப்பட்டு அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது போன்ற தவிப்பு. ஒருவரையொருவர் இயலாமையில் பார்க்கும் கையறுநிலை. சொந்தக் கால்களை சொந்தக் கைகளே வெட்டிப் போட்டது போன்ற பிரமை. விவரத்தை மெல்லக் கேள்விப்பட்ட இந்துப் பெண்கள் இப்போது திட்டித் தீர்த்தார்கள். 'பாழாப்போற பயலுக, மசூதி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே? இவங்களுக்கு என்ன வந்துட்டு? இடிச்சவங்க கையில கரையான் அரிக்க. வாயில புத்துவர. மாரியாத்தா. இடிச்ச பயலுவள இடிஞ்சு போக வையி தாயி! அடக்கடவுளே... இப்படியா ஒரு மசூதிய இடிப்பானுங்க?" இந்தப் பெண்கள் தங்களுக்குள் இப்படிப் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/24&oldid=882382" இலிருந்து மீள்விக்கப்பட்டது