பக்கம்:மூட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قاسات مع / 23 கொண்டிருந்தபோது, அவர்களுக்கு சற்றுத் தள்ளி நின்ற ஆண்கள் கூட்டத்தில் ஒரே சத்தம். 'பழிக்குப்பழி வாங்கணும். இந்த ஏரியாவுல ஒரு இந்துக் கோயில இருக்க விடக்கூடாது. புறப்படுங்கடா. இது ஒரு ஜகாத். யோசிக்க நேரமில்லை. இன்சா அல்லா. முதல்ல அபிராமி கோயில இடிக்கணும்.' அந்தப் பெருங்கூட்டத்திலிருந்து, ஒரு சின்னக் கூட்டம் கிளை விடப்போனது. கட்டிடத் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த மண்வெட்டிகளை ஆயுதங்களாகவும், இரும்புக் கம்பிகளை வேல்களாகவும், பாண்டு பாத்திரங்களை கேடயங்களாகவும் வைத்துக் கொண்டு அது புறப்படப் போனது. சாரங்களில் நின்ற பெண்களும் ஆண்களும் அங்கே நிற்பதா, கீழே இறங்குவதா என்று தெரியாமல் புலம்பி நின்றார்கள். கூட்டம் அவர்களையும் பார்த்துக் கீழே இறங்கும்படி சமிக்ஞை செய்வது போல் இருந்தது. அது, தங்களைத் தாக்குவதற்கா, அல்லது மசூதி மாடியைக் கட்டியது போதும் என்று சொல்வதற்கா என்பது புரியாமல் தொழிலாளர் கூட்டம் திக்குமுக்காடியது. என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக் கிறது என்பது மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது. ஜமாத் தலைவர் திவான் முகமதுவும், ஹாஜி அஜீஸும், தீப்பெட்டித் தொழிற்சாலை அதிபர் நூருல்லாவும் ஆங்காங்கே கூட்டத்திடம் கோபதாபமாய்ப் பேசுவதுபோல் கைகால்களை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், அமீரும் காதர் பாட்சாவும் இன்னும் ஒரு சிலரும் கிளைவிடப் போன கூட்டத்தை உரிமையோடு பின்னுக்குத் தள்ளினார்கள். அவர்களது மோவாய்களைப் பிடித்து கெஞ்சினார்கள். அல்லா பாத்துக்குவான் இன்சா அல்லா. இங்கே இருக்கவங்க நமக்கு எதிரியில்ல. அந்தக் கூட்டமும் அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவது போல் தோன்றியது. ஆனாலும் தொலைவில் வானமே வெடிப்பது போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/25&oldid=882384" இலிருந்து மீள்விக்கப்பட்டது