பக்கம்:மூட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قبسائعyع / 28 அபிராமி சிரித்தாளோ இல்லையோ, அந்த யூனிட சரக்காரர்கள், மாநிறமும் பூஞ்சை உடம்பும் தெத்துப் பற்களும் கொண்ட சங்கரசுப்புடன் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களுக்கு எதிரே தொலைவில் பூஜை அறையின் நுழைவாயிலில், அன்னை அபிராமி, திரிசூலமும் கையுமாய், சிங்கமும் ஆசனமுமாய் உள்ள திரைச் சீலை ஒதுக்கப்பட்டு, அந்த அன்னை இப்போது துணிக்கோடுகளாய் சுருக்கப் பட்டாள். அப்படி ஒடுக்கிய கைய்ை நிமிர்த்தியபடியே, பழனிவேல் வெளிப்பட்டார். நெற்றி முழுக்க விபூதிக் குவியல், அதில் கலப்படமான குங்குமம். கருமேக நிறம். அதனாலோ என்னவோ, மின்னல் போன்ற பற்கள். முறுக்கேறிய உடம்பு, குத்திட்டு நின்ற முடிகளால், பாசிப்பாறை போன்று தோன்றிய மார்பு. தொப்புளைத் தொட்ட டாலர் செயின் வாங்க, வாங்க, என்று சொன்னபடியே அந்தக் குரலுக்கு ஏற்ப அவசரமாய் நடக்காமலும், அவமரியாதையாக நிற்காமலும், அழுத்தம் திருத்தமாய் நடந்து, எதிரேயுள்ள ஒற்றை சோபாவில் உட்கார்ந்தார். அவர் அப்படி உட்காரும் வரை பொறுக்காத சங்கரசுப்பு, சலித்துக் கொண்டார். 'நீங்க இப்படி அம்பாளை விழுந்து விழுந்து கும்பிடுறீங்க! நீங்களும் நானும் கும்பிட்டு என்ன பிரயோசனம்? நேற்று ராத்திரி, பஸ் ஸ்டாண்டு பிளாட்பாரத்தில் இருந்ததே ராமர் கோயிலு-அதையும், சொக்கட்டான் குடியிருப்பு பக்கத்துல மாரியம்மன் கோவிலையும், முஸ்லிம் பயல்க உடைச்சுட்டாங்க...நம்ம அபிராமி கோயிலு வாசலுக்குள்ள கூட வந்துட்டாங்க...' பழனிவேல் முகத்தை கோபத்தனம் ஆக்கியபோது யூனிபார நடுத்தரம், அவர் முகத்தைப் பார்த்தபடியே சங்கரசுப்புடன் பேசியது. 'நாம பதிலுக்கு என்ன செய்தோம் என்கிறதையும் தலைவர் கிட்ட சொல்லுங்க"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/30&oldid=882393" இலிருந்து மீள்விக்கப்பட்டது